இந்தப்பதிவு - எனக்கு ’இரண்டு முதல்’கள்
1) கத்தார் - நாட்டிலிருந்து இந்த பதிவு!
2) என் புது லேப்டாப்பில் இருந்தும்!
-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-
DUNE BASHING
ஒரு Sand Dune சிகரத்திலிருந்து தோன்றும் காட்சி. இங்கு தெரியும் நீர் வளாகம் சுமார் 100-150 அடிக்குக்கீழே! (படங்களை பெரிதாக்கக்காண கிளிக்கவும்)
கத்தாரில், பாலைவன சஃபாரி (Desert Safari) என்று ஒரு நாள் போனோம். Sand Dunes-களில் புல்லரிக்கும் Dune Bashing! மணல் சிகரங்களில் பிறழ முயலும் அந்தத் தருணங்களில் சுதாரிப்பாக திருப்பி ஓட்டவேண்டும். தவறினால், உச்சியில் இருந்து குட்டிக்கரணம்தான். திறமையான ஓட்டுனர் - நாங்கள் மண் கவ்விவிடாமல் ஓட்டினார். தனியாக உருண்டால் அடிபடாது - வண்டியோடு உருண்டால்? நல்லதொரு ட்யூன் பேஷிங் வீடியோ இங்கே!
என் போன் காமராவிலிருந்து காரின் காலடி! (படங்களை பெரிதாக்கக்காண கிளிக்கவும்)
-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-
டேப்ளட் கணினி புரட்சி (Aakash Tab - Rs.2999/-)
போட்டி போட்டுக்கொண்டு நான் நீ என்று ஆம்லேட் மாதிரி டேப்ளட் வெளியிடுகிறார்கள். ஆண்ட்ராய்டு, ஐபோன் ஆகியவற்றின் ஆதிக்கத்தால், ஜாம்பவான் நோக்கியாவும் தங்கள் பதிப்பு டேப்பை அறிவிக்க வேண்டியிருக்கிறது. குறைந்த விலை ‘ஆகாஷ்’, ஒரு பெரிய புரட்சி என்று சொல்லப்படுகிறது. காசுக்கேற்ற தோசை என்றும் சொல்கிறார்கள். ஆகாஷ் டேப்பை முன் பதிவு செய்யலாம் இங்கே :
http://www.aakashdatawind.com/

ப(பி)டித்த புத்தகம்
நானோடெக்னாலஜி - சுஜாதா!
’நானோவை முழுவதும் புரிந்துகொள்ள முயல்வது, கடவுளின் அருகே நம்மை இட்டுச்செல்லும்’ போன்ற சுஜாதா அவர்களின் எழுத்துப்பிரயோகம் பிரமிக்க வைக்கிறது.
40 பக்கமுள்ள இந்த சிறியப்புத்தகத்தில், மாலிக்யூல் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்ப அறிமுகங்களும் கிடைக்கின்றது. மனிதன் தானே வளர்வதுபோல், தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ளும் எதிர்கால கம்ப்யூட்டர்கள் - எப்படி கேட்கவே சிலிர்ப்பாக இல்லை?
சுஜாதா-வின் புத்தகத்திற்கு விளம்பரம் தேவையில்லை! உயிர்மை பதிப்பகத்தில் தேடினால் இந்தப்புத்தகம் கிடைக்கிறது!

இனி சமீபத்தில் நான் வரைந்த கார்ட்டூன்களின் அணிவகுப்பு.
சிக்வே பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். ஒரு ஐடி நிறுவனத்தில், Cost-cutting-கிற்கு முன்னேயும் பின்னேயும்!
இதற்கு விளக்கம் தேவைப்படாது என நினைக்கிறேன் !!!
ரிலாக்ஸ் - புதுப்பாடல்! உருமி!

மீண்டும் சந்திப்போம்... : )

ஆ.. இந்த விளம்பரங்கள்..
திரைப்படம் என்றில்லாமல் சில நொடிகள் தோன்றும் விளம்பரங்களும் நல்ல களமாகி வருகின்றன புது இயக்குனர்களுக்கு!
* TOI-சென்னைப்பதிப்பு விளம்பரத்தில் தூங்கிக்கொண்டே இருக்கிறார் ஒருத்தர். போரடிக்கும் நாளிதழிலிருந்து, சுவாரஸ்யமான நாளிதழுக்கு மாறுங்கள் என்பதை சொல்வதாக இருக்கிறது. ’ஏற்கனவே உள்ள நாளிதழ்கள் ஒவ்வொருத்தரையும் சம்பவங்களின் இடத்திற்கே கொண்டு செல்கின்றன, ஆனால் நாம்தான் தூங்கிக்கொண்டிருக்கிறோம்’ என்றும் புரிந்துகொள்ளலாமா? இது அந்த விளம்பரத்திற்கு வெற்றியா?
* Facebook-ல் கிடைத்த விளம்பரத்தில். குழந்தைகளின் கலாச்சாரமும் போச்சா? என்று கேள்வி கேட்க முடியாது!
-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-ஆ.. இந்த விளம்பரங்கள்..
திரைப்படம் என்றில்லாமல் சில நொடிகள் தோன்றும் விளம்பரங்களும் நல்ல களமாகி வருகின்றன புது இயக்குனர்களுக்கு!
* TOI-சென்னைப்பதிப்பு விளம்பரத்தில் தூங்கிக்கொண்டே இருக்கிறார் ஒருத்தர். போரடிக்கும் நாளிதழிலிருந்து, சுவாரஸ்யமான நாளிதழுக்கு மாறுங்கள் என்பதை சொல்வதாக இருக்கிறது. ’ஏற்கனவே உள்ள நாளிதழ்கள் ஒவ்வொருத்தரையும் சம்பவங்களின் இடத்திற்கே கொண்டு செல்கின்றன, ஆனால் நாம்தான் தூங்கிக்கொண்டிருக்கிறோம்’ என்றும் புரிந்துகொள்ளலாமா? இது அந்த விளம்பரத்திற்கு வெற்றியா?
* எதிர்மறையான பயத்தை ஏற்படுத்தி காப்பீட்டு விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று விதியே இருக்கிறது. ஆனாலும், சாலை விபத்து பயம் ஏற்படுத்துகிறது ஒரு விளம்பரம்!
ரிலாக்ஸ் - புதுப்பாடல்! உருமி!
-o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o- -o0o-
மீண்டும் சந்திப்போம்... : )
No comments:
Post a Comment
தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக