Saturday, August 14, 2010

Circle the cat (addictive game) எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க பாருங்க!

ரு சவாலான பூனை! இங்கே அங்கே நகரவிடாமல் அதனை ஒரு பொறியில் சிக்கவைக்கவேண்டும்.. இதுதான் சுவாரஸியம்.. என் அலுவலகத்தில் இந்தப்பூனை ரொம்ப பிரபலம். சுதந்திர தின ரங்கோலி போட்டியில் வரையாத குறை! அவ்வளவு addictive..

சிலசமயம், இந்தப்புள்ளியா, அந்தப்புள்ளியா என்று ’மதில்மேல் பூனை’யாகி திணறவிடுகிறது!


வேலைக்கு பிரச்சனையாகாமல் இருக்கணும். அதேசமயத்துல, போரடிச்சா விளையாடணும் ஆன்லைன்ல.. அதுக்கும் வழி இருக்கு!
”என்னைப்பார்த்தா தெரியல நான் ரொம்ப பிஸினு ?? “- இப்படி ஒரு தளம்!

மாதிரியே இருக்கும்.. ஆனா எக்செல் இல்லை. வேர்ட்டும் இல்லை! மேனேஜர் பக்கத்துல இருந்தாலும் கண்டுபிடிக்கிறது கஷ்டம்!







மேனேஜர்களுக்கு ஒரு அட்வைஸ்:
உங்கள் டீம்மேட்ஸ், எம்.எஸ்.வேர்ட் அல்லது எம்.எஸ்.எக்செலில், பிஸியாக இருந்தா, கிட்டபோய் பாருங்க! ஏதோ நம்மளால முடிஞ்சது, நாரா..யணா !

Wednesday, August 11, 2010

எந்திரன் ரஜினி - ”தன்னடக்கத்தோட இருப்பது தப்பாய்யா?”


ந்திரன் இசை வெளியீட்டில் ரஜினி, காதல் காட்சிகளில் ஐஸூடன் நடிக்க கூச்சமாகவும், தூரத்திலிருந்து பார்த்தால், அமிதாப் ‘ஜாக்கிரத!’ (கபர்தார்) ங்கிறா மாதிரியும் இருந்தது.. என்று சொன்னாலும் சொன்னார். அடுத்த நாள், இணையத்தில் அந்த வார்த்தையின் ஹிட்ஸை நீங்களே பாருங்கள்..!

(கிளிக் செய்து பெரிதாக பார்க்கவும்)

நேற்றைக்கு யாஹூ(Yahoo!)வின் முகப்பில், ஒரு செய்தி! சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சினால், ரசிகர்கள் கடும் அதிருப்தி! யாரும் சங்கடப்படுறமாதிரி எதையும் சொல்லமாட்டார் ரஜினி!

யாஹூ-வே அவர் அரசியலுக்கு வருகிற பேச்சு, இனிமேல் எந்த சர்ச்சையையும் கிளப்பாது என்பதனால் அப்படி என்னதான் சொல்லி திடீர் சலசலப்பிற்கு காரணமானது? என்று தலையைப்பிய்த்துக்கொள்கிறது.

எந்திரன் படத்தில், கலாநிதியின் ஒத்துழைப்பு, ஷங்கர், ரஹ்மான், வைரமுத்து, ஐஸ்வர்யா ராய், ராண்டி, பீட்டர் ஹெய்ன்,பானு(ரஜினி மேக்கப் வுமன்) ஆகியோர்களின் உழைப்பு பற்றி சிலாகித்து கூறியதும், தன்னைத்தாழ்த்திக்கொண்டதுமாதிரி பேசியதும் சர்ச்சையை கிளப்பிக்கொண்டிருக்கின்றன...

ரஜினி -

“இந்தப்படத்தில், என் ஸ்டைல், என் பேச்சு...எதுவுமே கிடையாது. எல்லாமே டைரக்டர் எனக்காக முடிவு பண்ணிட்டார்..”, 

“நீங்களே வர்றீங்க, ஒரு குழந்தைக்கு அனைத்தும்  சொல்லிக்கொடுத்து, வேடிக்கை பார்ப்பதுமாதிரி எனக்கு நடக்க, பேச,நடிக்க, டான்ஸ் ஆட சொல்லிக்கொடுத்து, மேக்கப் போட்டு, பெரிய பெரிய படங்களெல்லாம் எடுத்து, என்னை அழகுபார்த்து, எனக்கு பெயர் வாங்கிக்கொடுக்கிறீங்க!” 

“150 கோடியில எடுப்பதுனால மட்டுமோ, அல்லது உலகப்பிரபலங்கள் பணிபுரிந்த படம் என்பதனாலேயோ இந்தப்படம் சூப்பர் என்றால் ஒத்துக்கமுடியாது...இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன்!”

இப்படி பேசியதுதான் பிரச்சினையாயிருக்கிறது...
ரஜினி ஒரு எளிமையான மனிதர்.. அவர் பேச்சும் செயலும் அப்படியே! (இமயம் செல்லும்போதெல்லாம், கட்டாந்தரையில் தூங்குவது; யாரும் எதிர்பாரா வண்ணம் கமல்-50 ல், ’தன் ரோல்மாடல் கமல்தான்!’ என்பது;) என்றைக்குமே தனக்கே தனக்கு ஒரு பிரமாண்டம் இருப்பதாக நினைப்பவரில்லை. அவருடைய எளிமை குணம் தெரிந்தும், தீவிர ரசிகர்களுக்கு அவருடைய பேச்சு சந்தோஷத்தை கொடுக்கவில்லை... நிஜத்தில் எவ்வளவுதான் தன்னடக்கத்தோடு இருந்தாலும், தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் இருக்கவேண்டும் என்பது ரசிகர்களின் அவா. (”ஆனா, படம் மட்டும் முதல் ஷோ வுல பாத்திருவோம் தலைவா!”)

(நன்றி: டைரக்டர் ஷங்கரின் தளம்)

ஜினி இன்னுமும் கதாநாயகனாக நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இருக்கிறார்கள்.. அவருக்கு ஐஸ் ஜோடியா என்ற அங்கலாய்ப்பு வேறு! Entrapment(1999) பார்த்திருந்தவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள். ஹீரோ ஷேன் கானரிக்கு சுமார் 70 வயது.. ஹீரோயின் காத்தரீனுக்கு 35!

ரோபோ கதை முதலில் சுஜாதாவால், கமலுக்காக எழுதப்பட்டது என்பது தெரியும். தயாரிப்பு செலவுகள் அதிகம் தேவை என்பதால் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது. கமலுக்குப்பின், ஷாருக், அஜித், அமீர்கான், கடைசியில் ரஜினி என்று முடிவு செய்து, இடையில் சுஜாதா மறைந்து, விட்டுச்சென்ற  மீதி வசனங்களை ஷங்கரே எழுதி... இதோ இப்பொழுது எந்திரன்!

ரோபோ-விற்கு, எந்திரன் அல்லது எந்திரா என்று சுஜாதா சொன்ன தமிழ்  தலைப்புகளிலிருந்து, எந்திரன்-ஐ ஓகே செய்துகொண்டார் ஷங்கர்.

எப்படி மறந்தார்கள் சுஜாதாவை...!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ரிலேக்ஸ் - ஓட்டல் வாசலில்!

அவ்ளோதான் இன்னிக்கி!
உங்கள் கருத்துக்களை சொல்லுங்க!

Saturday, August 7, 2010

எந்திரன் இசை வெளியீடு(Callout-toons) மற்றும் ஒரே நாளில் உலகப்புகழ்பெற்ற கைப்புள்ள!

ந்திரன் - இசை வெளியீட்டு விழாவில் சொல்லப்படாத விஷயங்கள்.. (முக்கியக்குறிப்பு : யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல!)




கலாநிதி மாறன்

தயாநிதி மாறன்

ரஹ்மானும் ஷங்கரும்

ஐஸ்வர்யா ராய்

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒரே நாளில் உலகப்புகழ்பெற்ற கைப்புள்ள!

Antoine Dodson என்றொருத்தரின் விரக்தியான (வெறும்) பேச்சு வீடியோவாக யூட்யிபில் கிடைக்க, Auto tune remix என்ற மென்பொருள் மூலம் புகுந்து விளையாடிவிட்டார்கள்..
சாதாரண பேச்சை பாடலாக மாற்றித்தரும் மென்பொருள் அது. ஒரிஜினல் பேச்சு மற்றும் ரீமிக்ஸ் என்று அவருடைய எல்லா வீடியோக்களுக்கும் இதுவரை கோடிக்கணக்கான ஹிட்ஸ்! யூட்யூபின் முகப்பிலும் இவருடைய முகத்தைப்பார்த்திருக்கலாம். மனிதர் செம குஷியில் இருக்கிறாராம்(அதுவும் யூட்யூபில் உள்ளது). வீடியோ கமெண்ட்களில் நிறவெறி தாண்டவமாடுவதுதான் சகிக்கமுடியவில்லை!

ரீமிக்ஸ் (பிரமாதமான பாடலாக!!!) இங்கே


ஓரிஜினல் இங்கே

குறிப்பு: இந்த இரண்டு வீடியோக்களால், பதிவு தரவிறக்குவதில் நேரமாகிறது. அதனால் அதன் இணைப்பு மட்டும் மேலே!

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...