Sunday, May 2, 2010

கமலின் தசாவதாரமும், செக்வே (Segway) யும்!

தசாவதாரம் திரைப்படத்தில், கமல் உபயோகிக்கும் இந்த வாகனத்தை பார்த்திருப்பீர்கள். இதற்கு பெயர் - செக்வே அல்லது சிக்வே. (Segway Personal Transporter)


இதன் சிறப்புக்கள்
  • இரண்டு லித்தியம் பாட்டரிகளால் இயங்கக்கூடியது.ஒரு தடவை சார்ஜ் ஏற்றினால்,24 மைல்களை, 12.5 மீ/ம வேகத்தில் கடக்கலாமாம்.
  • வாகனப்புகை கிடையாது(Zero emissions). எப்படியிருக்கும்? அதான் பாட்டரியாச்சே!

  • ஒரு சராசரி காரை விட, 11 மடங்கு சிறந்ததாக இருக்கிறதாம்.

  • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரி ரோடுகளில் மட்டுமல்ல, மிக கரடுமுரடான காடுகளில்கூட சிக்வே-யை பயன்படுத்தமுடியும். வழுவழு பிரதேசங்களில் மட்டும் பயன்படுத்தமுடியாது.

  • ஸ்கேட்டிங் போல சமநிலை பயிற்சி(balancing) தேவையா? இல்லவே இல்லை. செக்வே-யில் நமது சமநிலையையும் இயக்கத்தையும் உணர, ஆறு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. துரிதமாக மிகக்குறைந்த விநாடிகளில், சமநிலைமாற்றங்களை உணர்ந்துகொண்டு அதற்கேற்றவாறு,தானே சக்கரத்தை திருப்பி நின்றுகொள்கிறது.

”எப்படி காருக்கு ஒரு குட்டி குதிரை என்று உவமை தருகிறோமோ அதேபோல, இது ஒரு குட்டி கார் என்றால் தகும்!” என்கிறார் கண்டுபிடித்த Dean Kamen. மனிதர் அதற்குள் பாடண்ட் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறார். சுயமாக சமநிலைக்கு வரும் இயக்கதின் ரகசியத்தை எங்கிருந்து பெற்றாராம்? மனித உடலில் இருந்துதான்! நமது காதுகளுக்குள் இருக்கும் சமநிலை அமைப்பு, நாம் விழுப்போவதுபோன்ற தருணங்களில், ”விழப்போறான் காப்பாத்து!” என்று மூளைக்கு அறிவிக்க உடனே பாலன்ஸ் செய்து நின்றுவிடுவோம்.

விலை 2 லட்சம் என்று அதிகாரப்பூர்வமற்ற தளங்கள் தெரிவித்தாலும், செக்வே நிறுவன தளத்தில் ஒன்றும் சொல்லவில்லை.

சிக்வே-யில் பயணம் செய்யும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் சிக்வே-யில் இருந்து கீழே விழும் காட்சி இங்கே:


சிக்வே - சிறுசிறு விபத்துகள் யூட்யூபிலும்

http://www.youtube.com/watch?v=pmLLGYn9Fo8
http://www.youtube.com/watch?v=wjldrPLX7Pg
http://www.youtube.com/watch?v=LZSvHKU7ytc

மேலும் விவரங்கள் மற்றும் ஆதாரம்
http://www.segway.com
http://www.howstuffworks.com/ginger.htm


புலால் உண்பது பாவம் என்றால், செல்போன்கள் பயன்படுத்துவது அதைவிட பாவம். அதுவும், நீங்கள் அடிக்கடி போனை மாற்றுபவராக இருந்தால் பெரிய பாவக்காரர். ஏன்? ஒவ்வொரு செல்பேசி தயாரிப்பிற்காகவும் சுமார் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றதாம். அதை தவிர்க்கவேண்டி, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த புது சோனி எரிக்ஸன் போன் - Sony Ericsson Aspen™ GreenHeart™. இதைச்செய்வதினால், 13,000 மரங்கள் (உலகின் 15%) வெட்டாமல் காக்கப்படுமாம்!


தயவுசெய்து படித்த பிறகு மறவாமல் வாக்களிக்கவும் :)

No comments:

Post a Comment

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

LinkWithin

Related Posts with Thumbnails