Showing posts with label Post Release. Show all posts
Showing posts with label Post Release. Show all posts
Thursday, October 7, 2010
எந்திரன் - சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்!
ஏற்கனவே கதை ஊகங்கள் மற்றும் விமர்சனங்கள் என நிறைய பேர் பதிவிட்டு ஓய்ந்தபின், இப்பொழுது வந்து ஏன் இந்தப்பதிவு என்றால், படத்தில் சொல்லப்பட்ட ரோபோட்டிக்ஸ், என் கவனத்தை ஈர்த்ததுதான்! நான் பட்டப்படிப்பு(2000) படிக்கும்போது, ஐசக் அசிமோவின் ரோபோ விதிகள் மனப்பாடம்!
படத்தைப்பற்றி -
(+) முதன்முதலாக, தமிழில் அறிவியல் படம். (நன்றி:சுஜாதா மற்றும் ஷங்கர்).
(+) ரஜினியின் உழைப்பு & நடிப்பு(சிட்டி)
(+) ஐஸ் டான்ஸ்
(+) ஏ.ஆர்.ரஹ்மானின் இசை
(+) கிராபிக்ஸ்
சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்
* சோதனையோட்டத்தில்(Beta) இருக்கும் சிட்டியை எப்படி பொது இடங்களுக்கு அனுமதியில்லாமல் அழைத்துவரலாம்?
* ரோபோ வில்லன், மிரட்டலாக இருந்தாலும், அலெக்ஸ் பாண்டியன் சாயலை தவிர்த்திருக்கலாம். ரஜினிக்கு வில்லன் ரோல் பொருத்தம் என்று ஒரு பதிவர் சொல்லியிருந்தார். அது முற்றிலும் சரி!
* வசீ-யை ரோபோ கூட்டத்திலிருந்து கண்டுபிடிக்கும் காட்சி. அந்த இடங்களில் ரஜினி(சிட்டி)யின் நடிப்பு பிரமாதம். “இப்பொ என் கையாலே நீ சாகப்போறே!” என்று மிரட்டும் அந்தக்காட்சி படத்தில் ஹைலைட்! ”நண்பேன்டா!!!” மாதிரி புகழ் பெறக்கூடும். அந்த இடத்தில் பயமுறித்திருக்கவேண்டிய இசை பிடித்திருந்ததாலும் பயமுறுத்தவில்லை! ஏதோ சிம்பொனி மாதிரியிருக்கிறது!
* ஒரு ரோபோ இன்னொரு ரோபோவை தன்னிச்சையாக உருவாக்கமுடியுமா? Worst Case-ல், அத்தனை ரோபோக்களின் உருவாக்கத்திற்கும் வேண்டிய அடிப்படை பொருட்கள் - சர்க்யூட்கள் முதல் இரும்பு வரை - எங்கே எப்படி அதற்கு கிடைத்தது? Software - ஐ, காப்பி-பேஸ்ட் செய்யலாம். Hardware- ஐ காப்பி-பேஸ்ட் பண்ணமுடியாதில்லையா? அப்படியே உருவாக்கினாலும், எல்லா ரோபோக்களும் சமதிறன்களுடன் தானே இருக்கவேண்டும். தலைமை ரோபோ தவிர மற்றவை எல்லாம் ஆட்டுமந்தை போல சாதுவாக இருக்கிறதே! தங்களுக்குள் ஒரு மனிதன் இருப்பதை, தலைவன் மட்டும் தான் கண்டுபிடிக்கமுடியுமா?
* Highly equipped - என சொல்லப்படுகின்ற ரோபோக்களுக்கு மனிதனின் நடமாட்டம் தெரியவில்லையா!
* வசீயின் தாடி வில்லன் வளாகத்தில் இருக்கும்போது வளரவே வளராதா? தினம்தினம் ஷேவ் செய்ய வீட்டுக்குபோகிறார் என்றால், செக்யூரிட்டி ஆக்ஸஸ் பிரச்சினையை எப்படி சரிகட்டமுடிந்தது?
* உணவே தேவைப்படாத இடத்தில் ஏன் ஃபிரிட்ஜ், கிச்சன் எல்லாம்! ”யாருமே இல்லாத கடையில...”! ஐஸ்-ஐ கடத்தி வந்தால் தேவைப்படுமென்று முன்கூட்டியே அங்கேயே இருந்ததா?
* ரோபோ-க்களுக்கு, மின்திறன் குறையும்பொழுதெல்லாம், வழியில் உள்ள மின்சாரப்பெட்டியில் இருந்தோ காரிலிருக்கும் பெட்ரோல்லிருந்தோ சார்ஜ் ஏற்றிக்கொள்வது, நல்லாயில்லைங்க!
* ரோபோக்களை அழிக்கும்போது, வெறும் கட்டளைகளை மட்டும் அழித்தாலே போதுமானது. கைகால் தலையை வெட்டிவிட்டால் உயிர்(!) போகாது!
* ரோபோ-க்கள் அறிவிலி! அறிவூட்டம் செய்வதற்கும் முன், ரஜினி, “என்னை குத்துனு சொன்னா குத்திடுவியா?”,”முட்டாள்.. ஒரு போர்வையை சுத்திக்கிட்டு வரத்தெரியாது?” என்று கேட்கும் இடங்கள் லாஜிக் ஓட்டைகள்.
* ரோபோக்களுக்கு உணர்ச்சிகள் அமைப்பது கடினம்! மனித உடலில் ஹார்மோன்கள் பயணமே அல்லது ஹார்மோன்களால் நிகழும் மாற்றமே - உணர்ச்சிகள்.
* ஒரு ரோபோவே பல்லாயிரக்காண பலத்தைக்கொண்டிக்கையில், ஏன் ஆயிரம் ரோபோக்கள் விதவிதமான ஜியாமெட்ரி வடிவங்களெல்லாம் செய்து, சண்டையிட வேண்டும்? கிராபிக்ஸ் பிரமாதமானாலும், நீண்ட நேர கிளைமாக்ஸ், களைப்பாகிறது!
* நீச்சலை - படித்தல் என்பது வேறு! கற்றல் என்பது வேறு! ஒரு புத்தகத்தை படித்ததனால் மட்டுமே எப்படி ஒரு பிரசவம் பார்க்க இயலும்?
* ’மாற்றான் மனைவியை காதலிக்க முற்படும் ரோபோ’ என்ற ஒருவரி கதைக்களனை ரொம்ப பிரமாண்டமாக சொல்லியிருக்கிறார்கள். சுமார் 10 வருடங்களாக அடைகாத்த கதை. அதை அந்த சமயத்திலேயே எடுத்திருந்திருக்கலாமோ? இன்னும் பிச்சு உதறியிருக்கும்! எல்லாமே ரோபோடிக்ஸ்களின் பழைய கருத்துருக்கள்! முடிவில், ’ரோபோடிக்ஸ் படிப்பிற்கு நிறைய ஸ்கோப் உண்டு’ என்பது வேடிக்கையாக இருக்கிறது! (சுமார் பத்து வருடங்களுக்கு முன், அப்படி ஒரு தோற்றம் இருந்தது.)
* Mrs. Doubtfire (1993)-ன் பாதிப்பு கொஞ்சம் அவ்வை சண்முகியில் இருந்தால், Bicentennial Man (1999)-ன் சாயல் எந்திரனில்! இரண்டுக்கும் ஒரே ஒற்றுமை - ஃபிளப்பர் ஹீரோ - ராபின் வில்லியம்ஸ்!
NOTE: மேலேயுள்ளவை எந்திரன் கார்ட்டூன்-நான் வரைந்தது! (நல்லாயிருக்கா?)
Subscribe to:
Comments (Atom)
இன்னிசை அளபெடை சினிமாவிலா ?
கே ப்டன் விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனி...
-
வணக்கம்... காரணம் ஆயிரம்... "கோடாதி கோடி லட்சாப லட்ச பிளாக்குகள் ஏற்கனவே இருக்கின்றனவே.. இதில் நான் மட்டும் என்ன புதிதாய் சொல்லபோகிறேன்...
-
"Are you crazy?" என்றால் இனி தவறு! "Are you crasy?" அல்லது “Are you craxy?" என்பதுதான் சரி. ’ English Language Ce...
-
கே ப்டன் விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை என்பது செய்யுளை இனி...

