என் மகளிடம் வீட்டிலிருக்கும் புத்தகங்களை பற்றி கூறுகையில், "இந்த புத்தகம் உனக்கு அண்ணன், அந்த புத்தகம் பெரியப்பா" என வேடிக்கையாக சொல்வது வழக்கம். சில நூல்கள் கல்லூரியில் படித்த பொழுது வாங்கியவை. அவ்வளவு நாட்கள் படிக்காமல் வைத்திருக்கிறோமே என ஆதங்கப்பட்டுக்கொள்ள! எல்லாம் ஒரு வேடிக்கைக்காகத்தான்.
புத்தகங்கள் தாண்டி, பின்னர் 'ஓவியத்தூரிகை, கணினி, திரைப்படங்கள்', என பிற அரூப அஃற்றினை பொருட்களுக்கும் 'வயதைப்'பொருத்தி பார்க்கும் பழக்கம் தொற்றிக்கொண்டது.
பேருந்தில் காணக்கிடைத்த குறள் ஒன்று :
"இன்னா செய்தாரை எளிதாகப் போல் வினைத்தெய்வம்
வாழ்வாகப் பூசித் துணை."
மூளைப்புயல்(brainstorm) உருவாகியது! தமிழின் வயது ஒருபுறம் இருக்கட்டும். இந்த 'வாழ்வு' என்ற சொல்லின் வயது என்ன? 2000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமா? ஒரு நாளில் எத்தனை தடவைக்குமேல் இந்த வார்த்தையை பயன்படுத்துகின்றோம். 'அவனுக்கு வந்த வாழ்வை பாரு', 'வாழ்வுதான்’ என.
திருக்குறள்க்கு முந்தைய எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு முதலான நூல்களிலும் 'வாழ்' மட்டுமன்றி பல 'வயதற்ற'(ageless?) சொற்கள் காணப்படுகின்றன. எல்லோரும் ‘வாழ்த்த வயதில்லை’ என்பார்கள். ஆனால், 'வாழ்'விற்கு தான் (மற்றும் பிற தமிழ் சொற்களுக்கும்) வயதில்லை!
மீண்டும் உரையாற்றுவோம்.
No comments:
Post a Comment
தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக