யார் 'சுகாதாரம்' என்ற சொல்லை 'சுத்தம்' என மொழிபெயர்த்தார்கள் தெரியவில்லை. எனக்கென்னமோ 'சுகாதாரம்' ஒரு 'அட்ஜெக்ட்டிவ்(adjective)' போல் தோன்றுகிறது. 'சுகம் + 'ஆதாரம்' (source of ease/happiness) என்பது எப்படி 'சுத்தத்திற்கு' சமமாக பொருள்கொண்டிருக்கமுடியும் என்று 'சுத்தமாக' புரியவில்லை!
'சுத்தமே சுகாதாரம்' என்பது 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது போன்று சொல்லப்பட்டிருந்து, காலப்போக்கில் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான் என்றாகிவிட்டது போல!
'வீட்டை நாட்டை சுகாதாரமாக வைத்துக்கொள்ளவேண்டும்' என்ற வாக்கியம் சரியானது தான்; அதை 'சுத்தம்' என்று பொருள்கொண்டாலும் சரி, 'நிம்மதி' என நினைத்துக்கொண்டாலும் சரி! உங்கள் விருப்பம்!
மீண்டும் உரையாற்றுவோம்.
No comments:
Post a Comment
தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக