Sunday, February 21, 2010

ரியல் எஸ்டேட் கண்காட்சியும், சாலமன் பாப்பையாவும்!

CREDAI அமைப்பை சேர்ந்த தமிழக ரியல் எஸ்டேட் அதிபர்கள், இந்த வாரம் தங்களுடைய ப்ராஜக்ட்கள்(கட்டிடங்கள்) பற்றிய கண்காட்சியினை சென்னை நந்தம்பாக்கம் Chennai Trade Center-ல் நடத்தினார்கள். கடைசி நாளான இன்று போன போது செமத்தியான கூட்டம்.

நன்றி அக்‌ஷயா ஹோம்ஸ்
(நன்றி அக்‌ஷயா ஹோம்ஸ்)

காரணம் - Affordable வீடுகளல்ல, சாலமன் பாப்பையா! ‘தனி வீடா அல்லது தொகுப்பு வீடா (வாங்குவதற்கு எது சிறந்தது?)’ என தங்கள் வழக்கமான பட்டிமன்றக்குழுவினரோடு (ராஜா,பாரதி பாஸ்கர், மேலும் நால்வர்) வந்திருந்தார். தெரிந்த தீர்ப்பைத்தான் சொல்லப்போகிறார் என்றாலும், பாப்பையாவுக்காக நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள்.

ஸ்டார் பேச்சாளர்களான ராஜாவும், பாரதி பாஸ்கர் பேசியது கடைசியில்!

ராஜா வாதாடியது தனி வீட்டுக்காக - “தனிவீடுனா, ஒரு Privacy இருக்கும், முழு உரிமை (தரையும் என்னது, கூரையும் என்னது) இருக்கும்.தொகுப்பு வீடுகளில், பக்கத்து வீட்டுக்காரர்கள் பெரும்பாலும் வம்புக்காரர்களாக இருப்பது, ஒரு வீட்டில் இருக்கும் குழந்தைகளின் விளையாட்டுச்சத்தம் அருகாமையில் இருக்கும் வயதானவர்களுக்கு தொல்லையாய் இருப்பது” இப்படி சில விஷயங்களைக்குறிப்பிட்டார். ”நான் மூன்றாவது மாடியில் தொகுப்பு வீட்டில் இருக்கிறேன். வசதியிருந்தால் தனி வீடு வாங்கி செட்டிலாகுங்கள்” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்து பாரதி பாஸ்கர், தொகுப்பு வீட்டைப்பற்றி ”Affordability,Security" என்று குறிப்பிட்டார். வருவாய்க்கு ஏற்ற வாங்கும் திறன் உள்ள மேல்நடுத்தர வர்க்கத்தினர் ஒருவருக்கு தொகுப்பு வீடுதான் ஏற்றது. அக்கம்பக்கத்தினர் இருப்பதால் பயமில்லாமலும் இருக்கலாம். தன் வயதான பெற்றோர்களை கவனிக்க இயலாமல் இருப்பதற்கு காரணம், பெற்றோர்கள் தனிவீட்டில் இருப்பதுதான் என்றும் சொன்னார். ஊருக்கு வெளியில் எங்கோ தனி வீடென்று எடுத்தால், அண்டைவீட்டுக்காரர் எனப்படுபவர் பல கிமி தொலைவில் இருப்பார். அதனால், பலமுறை யோசித்து தொகுப்பு வீடு வாங்கிக்கொள்ளுங்கள். இப்படி சில கருத்துக்களைச்சொன்னார்.

சரி அடுத்து தீர்ப்புதான் என்று எல்லோரும் நிமிர்ந்து உட்காரும் சமயம். செக்ரட்டரி மைக்கில் குறுக்கிட்டார். “குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு தீர்ப்பைத்தருமாறு, நடுவரிடம் வேண்டுகிறோம்” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

பெரிய கேக்கோடு வந்து மேடையேறினார்கள் மாடல் பெண்கள். பாரதி பாஸ்கர்தான் உண்மையைச்சொன்னார். “நடுவர் பாப்பையா அவர்களுக்கு நாளை பிறந்தநாள். இது அவருக்கு மேடையுலகில் பொன்விழா ஆண்டு. மேடைகளில் பேச ஆரம்பித்து ஐம்பது வருடங்கள் ஆகின்றன” என்றார். பிறகு, சம்பிரதாயத்திற்கு கேக் ஊட்டல், பொன்னாடை போர்த்துதல், நினைவுப்பரிசு வழங்குதல்,பார்வையாளர்களும் தனித்தனியாய் போய் வாழ்த்து சொல்லுதல் என்று கொஞ்ச நேரம் பட்டிமன்றத்தையே மறந்துவிட்டார்கள்!

அதற்கப்புறம் பட்டிமன்றத்தை மீட்டெடுத்தது, பாப்பையாதான். ”வருவாய்க்கு மீறி பணம் செலவிட்டு ஊருக்கு வெளியில் தனி வீடு வாங்குவதை விட நகர்ப்புறத்திலேயே தொகுப்பு வீடுகளில் இருப்பது பாதுகாப்பானது மற்றும் சிறந்தது” என்று அறிவித்தார்.

சரி, கண்காட்சியில் வீடெல்லாம் எப்படி என்கிறீர்களா? அடப்போங்கங்க..
சிட்டியிலிருந்து 2 மணி நேரத்திலில் இருக்கிறது இந்த இடம், வெறும் 15-தான் என்கிறார்கள். இப்படி சொன்னதும், எனக்கு சொல்லத்தோன்றியதெல்லாம் இதுதான் - ”சிட்டியிலிருந்து 8 மணி நேரத்தில் எங்க மருத ஊரே வந்துடுமேப்பா??!!”.

அடையார் காந்திநகர் வீடென்றால், எக்கச்சக்க டப்பும் உடையார்! மைலாப்பூரில் ஒரு சதுர அடி 13500/- விலை போகிறது. சிறுசேரி, டைடலைக்காரணம் காட்டி, திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை(Most Polluted Place), மடிப்பாக்கம் (ஜாக்கிரதை - மழைதண்ணீர்), மேடவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில், விலை தாறுமாறாகிறது.

இந்தப்பக்கம், ராமாபுரம்,வளசரவாக்கம்(சென்னையின் 7வது அதிகவிலைபோகும் இடம் என்று எங்கோ படித்தது), போருர்,அய்யப்பந்தாங்கல், மௌளிவாக்கம்,பூந்தமல்லி,அதையும்தாண்டி... என சென்னை மாநகரம் இன்னும் இன்னும் விரிவு பெறுகிறது. ரியல் எஸ்டேட் காளைக்கு கடிவாளம்(from Govt) தேவை!

சிட்டியிலிருந்து (பூந்தமல்லியிலிருந்து) வெறும் 30 கிமி தொலைவில் ராஜீவ் நினைவிடத்திற்கு அருகாமையில் 750 சதுர அடி, இரண்டு படுக்கையரை கொண்ட வீடு வெறும் 14.7L க்கு, ஒரு இடத்தில் தருகிறார்கள்.. அதுதான் பரபரப்பான பேச்சே!

எதிர்காலத்தில் அந்தப்பகுதியில், விமான நிலையம் வரப்போகிறது என்றும், இல்லை அந்த பிளான் dropped என்று இரு வேறு தகவல்கள் கசிகின்றன...

Price - is What you pay,
Value - is What you get
வாரன் பப்பெட்

கண்காட்சியில் படித்தது!

இதென்ன இது புது வில்லங்கம் (இதப்படிங்க)
--o0o--

Saturday, February 6, 2010

நகரும் அதிசய கற்கள் - அதிசய இயற்கை நிகழ்வுகள்-1

வீடு கட்டப்பயன்படும் ஒரு அஸ்திவாரக்கல்(குண்டுக்கல்) அளவுள்ள ஒரு பாறை தானாக சமதள மணலில் நகர்கிறது, பெரிய தடத்தோடு! மனிதர்களோ மிருகங்களோ அதை நகர்த்தியதற்கான தடங்கள் எதுவுமே இல்லை..

Racetrack Playa - பாலைவனம்போல வறண்ட ஏரி. வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மலைப்பிரதேசங்களில் இருக்கின்றது(Panamint Mountains in Death Valley National Park, Inyo County, California). இங்கேதான், சின்னக்கற்கள் மற்றுமின்றி கால்பந்து அளவிலான கற்கள் கூட தானாக நகர்வதை, இயற்பியல் விஞ்ஞானிகள் வியப்புடன் பார்க்கிறார்கள்..

சிறு சிறு குழுக்களாக இரவு பகலாக ஆராய்ந்ததின் பலனாக மர்மத்தை விடுவிக்கமுடிந்தது.. கற்கள், பனிக்கட்டிகளின் உதவியினால் காற்றில் மட்டுமே நகர்கிறது என்று !!!

காற்றிலா ????!!!
(ரொம்ப அரிதான) பல கிலோமீட்டர்/நொடி வேகத்தில் காற்று பலமாக ஒரு சிறு கல்லில் ’மோதினால்’ மட்டுமே, அது தன்னிச்சையாக சில அங்குலம் நகர வாய்ப்புக்கள் உள்ளன. அதுவே, (மிதக்கும்)பனிக்கட்டியில் கட்டுண்டு நீரில் இருந்தால், சுலபமாக நீரில் பனிக்கட்டியுடன் சேர்ந்து நகரும்.எவ்வளவு பெரிய கல்லாகயிருந்தாலும்! எப்போவாவது பெய்யும் மழையால் தோன்றும் கொஞ்ச நீர், குளிர் காலத்தில் அரையும்குறையுமாக உறைந்திருக்கும்.

கீழே பாருங்கள்:
http://geology.com/articles/racetrack-playa-sliding-rocks.shtml

Racetrack_Playa - Sliding Stones 1

Racetrack_Playa - Sliding Stones 2

Racetrack_Playa - Sliding Stones 3

Racetrack_Playa - Sliding Stones 4

இப்படித்தான்:

Sliding Rocks - Phenomenon


காற்று, நீர், பனிக்கட்டி, நகருதல் - இதுதான் ரகசியம்!

ஆதாரம்:
http://geology.com/articles/racetrack-playa-sliding-rocks.shtml
http://www.physicsforums.com/archive/index.php/t-60676.html
http://www.physicsforums.com/showthread.php?t=60676

சில படங்கள்:
http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c7/Racetrack_Playa_(Pirate_Scott).jpg
http://runner.coleskingdom.com/pics

சில வீடியோக்கள்:
http://www.youtube.com/watch?v=yOEiuB7P7yk
http://www.youtube.com/watch?v=tHJKKdEo8TQ
http://www.youtube.com/watch?v=Kgy9HMMcstI


”வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு விரைவாக முடிவெடுக்கும் ஒரு கலை” - எங்கேயோ படித்தது.


கருத்துக்களை கீழே சொல்லுங்க !!!

Tuesday, February 2, 2010

தகுதி !!! (ஒரு பக்கச்சிறுகதை)

”இண்டர்வியூவாய்யா இது! சுத்த கண்துடைப்பு. எம்மெஸ்ஸியில கோல்ட்மெடல் வாங்கிருக்கேன்.. எனக்கு கிடைக்கலனுகூட வருத்தப்படல.. ஊர்ல கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து,போலீஸ் கேசு-னு இருந்தவனையெல்லாம் வேலைக்கு சேர்த்திருக்காய்ங்க.. அதுவும் ஒரு மேளாளர் பதவிக்கு! உலகம் எப்படியெல்லாம் போகுது பாரு!” - உள்ளே நுழைந்துகொண்டிருந்த சண்முகராஜன் காதில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது விழுந்தது.

நேரே பத்மநாபனிடம் வந்தார். இருவரும் அந்த பி.எஸ்.கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள். “என்ன பத்மநாபன், அந்தப்பசங்களையும் புடிச்சிப்போட்டுடவேண்டியதுதானே! சும்மா புலம்பிக்கிட்டேருக்கானுங்க!”

”சண்முகம், இந்த கம்பெனியை எதற்காக ஆரம்பிச்சோம்னு சொல்லுங்க பார்ப்போம்!”

“வீடே இல்லாமல் இருக்கிற நகர மக்களுக்கு குறைந்த விலையில் மனை வாங்கித்தர்றதுக்காக...” சொல்லிக்கொண்டிருக்கும்போதே மறுத்து, “அது மத்தவங்களுக்கு! நான் கேட்டது, உண்மையான காரணம்!”

மெல்லிய குரலில் சண்முகராஜன், “என்ன.. எல்லார்ட்டையும் வாங்கின பணத்தை ஆட்டைய போடுறது.. எங்கையாவது தலைமறைவா ஆகிடறது.. இதுதானே! அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்!” என்று கேட்டார்.

“கரெக்ட். நாம ஓடப்போறது உறுதி. அதுக்கு ஏன் இந்த அப்பாவிப்பசங்கள் பலிகடா ஆக்கணும். நாம ஆட்டையப்போட்டு கம்பி நீட்டிட்டா, மக்களிடமும் போலிசிடமும் மாட்டிக்கொண்டு அடிவாங்கிறது, காந்தியோ, நேருவோ இல்ல! அப்புறம் இன்னுமொரு திருத்தம். நாம ஆட்டைய போடப்போறது உழைத்துக்கிடைத்த வெள்ளைப்பணத்தையல்ல!”

Monday, February 1, 2010

நேர்முகத்தேர்வுகளில் சமீபகாலமாக.. !!!

நேர்முகத்தேர்வுகளில் சமீபகாலமாக.. !!!

நீண்ட நாள் பிரம்மச்சாரிக்கு பெண் கிடைத்தால், அதுவும் லட்சணமான பெண் கிடைத்தால் என்ன ஆகும்? கூட்டம் பிய்த்துக்கொண்டு போகும் இல்லையா? அதுமாதிரிதான் இருந்தது சமீபகாலமாய் நேர்முகத்தேர்வுகளுக்கு வருகிற கூட்டத்தைப்பார்த்தால்!

Interview


ஒரு விஷயத்தில் மகிழ்ச்சி என்றாலும் (பின்னே? போட்டியில்லாமல் வெற்றி பெற்றால் சுவாரஸியமில்லையே!) இன்னொரு பக்கம், பெரிய கேள்விக்குறி! 2-3 வருடங்கள் மிகுந்த அனுபவம் உள்ளவர்களின் எண்ணிக்கையே இவ்வளவு அதிகம் என்றால், தற்பொழுதுதான் முடித்துவிட்டு வருகிறவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் இருக்கும் இல்லையா (பொறியியல் + பிற கணினி பட்டதாரிகள்)? அவர்களுக்கெல்லாம் வேலை எங்கிருந்து?

நான் சென்றது ஒரு பன்னாட்டு நிறுவனம். எதிர்பாராமல் வந்த பெரிய கூட்டத்தை எதிர்கொள்ளமுடியாமல் திண்டாடினர். காலையில் 9 மணிக்கு சென்ற என்னை முதல் சுற்றுக்கு அழைக்கப்பட்டது மாலை 6 மணிக்கு!!!
* * * * * * * * * * * * * *
யாரடி நீ மோகினி படத்தில் ஒரு சிறு தவறு!

Photobucket


கருணாஸ்-ஐ விட்டு நயன்தாராவிடம் தன் காதலை சொல்லச்சொல்வார் தனுஷ். கருணாஸ் பயந்துபயந்து கால் பண்ணுவார். நயன்தாரா எடுத்து பேசுவார். இரு பக்கமும் காட்டப்படுகிற இந்தக்காட்சியில், கருணாஸ் மற்றும் தனுஷ் இருக்கும் பகுதி நன்றாக இரவுபோல இருட்டியிருக்கும். ஆனால், நயன்தாரா பகலில்தான் பதிலளிப்பார். சரி இதையாவது பாவம் விட்டுவிடுவோம், ஒரு பெரிய படத்தில் ஒரு தவறு தெரியுமா?
* * * * * * * * * * * * * *
2012 படமும் சுனாமித்தவறும்

tsunami


நிஜமாகவே மிரட்டியிருந்தார்கள் உண்மையைப்போலவே! இமயமலை-சுனாமி காட்சி திகிலை உண்டாக்கியது.. எங்கே போனாலும் துரத்தும் நாய்குட்டிபோல ஒரு பூகம்பக்குட்டி(!) விடாமல் துரத்துகிறது. ஹைதியை உலக அழிவின் ஆரம்பமாக கூட பயந்துகொண்டு பார்ப்பார்கள். ஹைதி சம்பவம் ஒரு போராயுதமாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறார்களாம் என்று ஒரு பதிவர் எழுதியிருந்தார்.

இவ்வளவு துல்லியமாக பண்ணியிருக்கிறவர்களின் கண்களுக்கு இந்த சிறிய தவறு தெரியாமல் போனது ஆச்சரியம்.. கடலில் அலைகள் தோன்றும் இடங்களில்தான் சுனாமியின் பாதிப்பு அதிகமாக இருக்கும். நடுக்கடலில் அலைகள் இல்லை! அதனால் சுனாமியின்போது (நடுக்)கடல்மட்டம் சற்றே உயர்ந்து இறங்கும் அவ்வளவுதான். அந்தசமயங்களில், கப்பல் இருந்தாலும் கவிழாமல் உயர்ந்து பின் இறங்கும். புரட்டிபோடாது!
* * * * * * * * * * * * * *
அய்யகோ இந்த சென்னை ஆட்டோக்காரர்கள்
சென்னை வந்தகாலத்திலிருந்து, பெரும்பான்மையான ஆட்டோக்காரர்களின் மீதுள்ள பொதுவான மதிப்பீடுகளான அடாவடிக்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள், அதிகம் வசூலிக்கிறவர்கள் ஆகியவை மாறாமல் அப்படியே இருக்கிறது. போனவாரம், திநகரிலிருந்து, பெரியார்பாதைக்கு பதில், பெரியார் ரோடு என்று ஒரு இடத்தில் இறக்கிவிட்டு, அடாவடியாகப்பேசி காசும் வாங்கிச்சென்றார் ஒரு ஆட்டோக்காரர். அப்புறம் எங்கிருந்து நல்லமதிப்பு வரும்?

அதையும்மீறி சிலர் இருக்கிறார்கள், ராமாபுரத்திலிருந்து வரும் திருக்குறள் ஆட்டோ. சைதையில் இவரை அடிக்கடி பார்க்கலாம். ஆட்டோ முழுவதும் தினம் தினம் ஒரு குறள், அதன் பொருள், நாலடியார், எல்லாம் எழுதிவைத்திருப்பார்.

Samson


மற்றொருத்தர், தனக்கு ஒரு வலைப்பக்கம் வைத்துள்ளார். அவருடைய தளம் இங்கே. நல்ல உழைப்பாளியான இவருக்கு நிறைய (வெளிநாட்டு) வாடிக்கையாளர்கள் உண்டு. இவருடைய சேவையை புரிந்துகொண்டு நண்பர்களானவர்கள்தான் இவருக்கு வலைதளம் வடிவமைத்து, ஒரு மடிக்கணினியும் கூட வாங்கிக்கொடுத்துள்ளார்கள். சென்னைக்கு வருவதற்கு முன் மின்னஞ்சலில் தெரிவித்துவிட்டால், இவர் அவர்களின் வருகைகளுக்காக தயாராக இருப்பார். படித்தது பள்ளிக்கல்வி வரைதான் என்றாலும், வாடிக்கையாளர்களுக்காக ஆங்கிலம் பேசக்கற்றுகொண்டிருக்கிறார். தொலைதூர பயணத்திற்கு மீட்டர் போடுவது என்பது இவருடைய ஸ்பெஷாலிட்டி. மீட்டர் பற்றி யாராவது மற்ற ஆட்டோக்காரர்களை கேட்டுப்பாருங்கள்.. உங்களை அவதார்(வேற்றுக்கிரகவாசி) ரேஞ்சுக்கு மேல்கீழ் பார்ப்பார்கள்.
* * * * * * * * * * * * * *

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...