(நன்றி அக்ஷயா ஹோம்ஸ்)
ஸ்டார் பேச்சாளர்களான ராஜாவும், பாரதி பாஸ்கர் பேசியது கடைசியில்!
ராஜா வாதாடியது தனி வீட்டுக்காக - “தனிவீடுனா, ஒரு Privacy இருக்கும், முழு உரிமை (தரையும் என்னது, கூரையும் என்னது) இருக்கும்.தொகுப்பு வீடுகளில், பக்கத்து வீட்டுக்காரர்கள் பெரும்பாலும் வம்புக்காரர்களாக இருப்பது, ஒரு வீட்டில் இருக்கும் குழந்தைகளின் விளையாட்டுச்சத்தம் அருகாமையில் இருக்கும் வயதானவர்களுக்கு தொல்லையாய் இருப்பது” இப்படி சில விஷயங்களைக்குறிப்பிட்டார். ”நான் மூன்றாவது மாடியில் தொகுப்பு வீட்டில் இருக்கிறேன். வசதியிருந்தால் தனி வீடு வாங்கி செட்டிலாகுங்கள்” என்று முடித்துக்கொண்டார்.
அடுத்து பாரதி பாஸ்கர், தொகுப்பு வீட்டைப்பற்றி ”Affordability,Security" என்று குறிப்பிட்டார். வருவாய்க்கு ஏற்ற வாங்கும் திறன் உள்ள மேல்நடுத்தர வர்க்கத்தினர் ஒருவருக்கு தொகுப்பு வீடுதான் ஏற்றது. அக்கம்பக்கத்தினர் இருப்பதால் பயமில்லாமலும் இருக்கலாம். தன் வயதான பெற்றோர்களை கவனிக்க இயலாமல் இருப்பதற்கு காரணம், பெற்றோர்கள் தனிவீட்டில் இருப்பதுதான் என்றும் சொன்னார். ஊருக்கு வெளியில் எங்கோ தனி வீடென்று எடுத்தால், அண்டைவீட்டுக்காரர் எனப்படுபவர் பல கிமி தொலைவில் இருப்பார். அதனால், பலமுறை யோசித்து தொகுப்பு வீடு வாங்கிக்கொள்ளுங்கள். இப்படி சில கருத்துக்களைச்சொன்னார்.
சரி அடுத்து தீர்ப்புதான் என்று எல்லோரும் நிமிர்ந்து உட்காரும் சமயம். செக்ரட்டரி மைக்கில் குறுக்கிட்டார். “குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு தீர்ப்பைத்தருமாறு, நடுவரிடம் வேண்டுகிறோம்” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
பெரிய கேக்கோடு வந்து மேடையேறினார்கள் மாடல் பெண்கள். பாரதி பாஸ்கர்தான் உண்மையைச்சொன்னார். “நடுவர் பாப்பையா அவர்களுக்கு நாளை பிறந்தநாள். இது அவருக்கு மேடையுலகில் பொன்விழா ஆண்டு. மேடைகளில் பேச ஆரம்பித்து ஐம்பது வருடங்கள் ஆகின்றன” என்றார். பிறகு, சம்பிரதாயத்திற்கு கேக் ஊட்டல், பொன்னாடை போர்த்துதல், நினைவுப்பரிசு வழங்குதல்,பார்வையாளர்களும் தனித்தனியாய் போய் வாழ்த்து சொல்லுதல் என்று கொஞ்ச நேரம் பட்டிமன்றத்தையே மறந்துவிட்டார்கள்!
அதற்கப்புறம் பட்டிமன்றத்தை மீட்டெடுத்தது, பாப்பையாதான். ”வருவாய்க்கு மீறி பணம் செலவிட்டு ஊருக்கு வெளியில் தனி வீடு வாங்குவதை விட நகர்ப்புறத்திலேயே தொகுப்பு வீடுகளில் இருப்பது பாதுகாப்பானது மற்றும் சிறந்தது” என்று அறிவித்தார்.
சரி, கண்காட்சியில் வீடெல்லாம் எப்படி என்கிறீர்களா? அடப்போங்கங்க..
சிட்டியிலிருந்து 2 மணி நேரத்திலில் இருக்கிறது இந்த இடம், வெறும் 15-தான் என்கிறார்கள். இப்படி சொன்னதும், எனக்கு சொல்லத்தோன்றியதெல்லாம் இதுதான் - ”சிட்டியிலிருந்து 8 மணி நேரத்தில் எங்க மருத ஊரே வந்துடுமேப்பா??!!”.
அடையார் காந்திநகர் வீடென்றால், எக்கச்சக்க டப்பும் உடையார்! மைலாப்பூரில் ஒரு சதுர அடி 13500/- விலை போகிறது. சிறுசேரி, டைடலைக்காரணம் காட்டி, திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை(Most Polluted Place), மடிப்பாக்கம் (ஜாக்கிரதை - மழைதண்ணீர்), மேடவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில், விலை தாறுமாறாகிறது.
இந்தப்பக்கம், ராமாபுரம்,வளசரவாக்கம்(சென்னையின் 7வது அதிகவிலைபோகும் இடம் என்று எங்கோ படித்தது), போருர்,அய்யப்பந்தாங்கல், மௌளிவாக்கம்,பூந்தமல்லி,அதையும்தாண்டி... என சென்னை மாநகரம் இன்னும் இன்னும் விரிவு பெறுகிறது. ரியல் எஸ்டேட் காளைக்கு கடிவாளம்(from Govt) தேவை!
சிட்டியிலிருந்து (பூந்தமல்லியிலிருந்து) வெறும் 30 கிமி தொலைவில் ராஜீவ் நினைவிடத்திற்கு அருகாமையில் 750 சதுர அடி, இரண்டு படுக்கையரை கொண்ட வீடு வெறும் 14.7L க்கு, ஒரு இடத்தில் தருகிறார்கள்.. அதுதான் பரபரப்பான பேச்சே!
எதிர்காலத்தில் அந்தப்பகுதியில், விமான நிலையம் வரப்போகிறது என்றும், இல்லை அந்த பிளான் dropped என்று இரு வேறு தகவல்கள் கசிகின்றன...
Price - is What you pay,
Value - is What you get
வாரன் பப்பெட்
கண்காட்சியில் படித்தது!
இதென்ன இது புது வில்லங்கம் (இதப்படிங்க)
--o0o--
ரியல் எஸ்டெட் துறையில் பல அரசியல் பெரும்புள்ளிகள் இறங்கி விலைகள் தாறுமாறாக உள்ளது.. நியாயமான் விலையில் மக்கள் வீடுகளை வாங்க ஆவன செய்வது அரசின் கடமை
ReplyDelete