Tuesday, February 2, 2010

தகுதி !!! (ஒரு பக்கச்சிறுகதை)

”இண்டர்வியூவாய்யா இது! சுத்த கண்துடைப்பு. எம்மெஸ்ஸியில கோல்ட்மெடல் வாங்கிருக்கேன்.. எனக்கு கிடைக்கலனுகூட வருத்தப்படல.. ஊர்ல கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து,போலீஸ் கேசு-னு இருந்தவனையெல்லாம் வேலைக்கு சேர்த்திருக்காய்ங்க.. அதுவும் ஒரு மேளாளர் பதவிக்கு! உலகம் எப்படியெல்லாம் போகுது பாரு!” - உள்ளே நுழைந்துகொண்டிருந்த சண்முகராஜன் காதில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது விழுந்தது.

நேரே பத்மநாபனிடம் வந்தார். இருவரும் அந்த பி.எஸ்.கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள். “என்ன பத்மநாபன், அந்தப்பசங்களையும் புடிச்சிப்போட்டுடவேண்டியதுதானே! சும்மா புலம்பிக்கிட்டேருக்கானுங்க!”

”சண்முகம், இந்த கம்பெனியை எதற்காக ஆரம்பிச்சோம்னு சொல்லுங்க பார்ப்போம்!”

“வீடே இல்லாமல் இருக்கிற நகர மக்களுக்கு குறைந்த விலையில் மனை வாங்கித்தர்றதுக்காக...” சொல்லிக்கொண்டிருக்கும்போதே மறுத்து, “அது மத்தவங்களுக்கு! நான் கேட்டது, உண்மையான காரணம்!”

மெல்லிய குரலில் சண்முகராஜன், “என்ன.. எல்லார்ட்டையும் வாங்கின பணத்தை ஆட்டைய போடுறது.. எங்கையாவது தலைமறைவா ஆகிடறது.. இதுதானே! அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்!” என்று கேட்டார்.

“கரெக்ட். நாம ஓடப்போறது உறுதி. அதுக்கு ஏன் இந்த அப்பாவிப்பசங்கள் பலிகடா ஆக்கணும். நாம ஆட்டையப்போட்டு கம்பி நீட்டிட்டா, மக்களிடமும் போலிசிடமும் மாட்டிக்கொண்டு அடிவாங்கிறது, காந்தியோ, நேருவோ இல்ல! அப்புறம் இன்னுமொரு திருத்தம். நாம ஆட்டைய போடப்போறது உழைத்துக்கிடைத்த வெள்ளைப்பணத்தையல்ல!”

No comments:

Post a Comment

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...