Tuesday, November 17, 2009

தேடுபொறிகள் (Search Engines) - இனி மெல்ல சாகும்... ????!!!!

'என்னது ??
நிஜமாவா...
பல்லுவெளக்காம கூட இருந்திருவேன்..
கூகிள்லாம இல்லாம, எப்படி கோடடிக்கிறதாம் ???'

--o0o--

ஆமாம்... புதிய கண்டுபிடிப்புகள் எளிமையாகயும், வசதியாகவும் இருந்துவிட்டால், பழையது மறக்கப்படுகிறது.. இது தொழில்நுட்பத்திற்கும் பொருந்தும்..

இடைக்காலத்தில், அறிமுகமான தேடுபொறிகள், நிஜமாகவே பொறி பறக்கச்செய்தன.. Clustering (வகைப்படுத்துதல்) , Semantic (பொருளுணர்ந்த தேடல்) ஆகிய தொழில்நுட்ப முயற்சிகள் இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன...

எத்தனை மேம்படுத்தினாலும், இந்த தேடுபொறிகள், ஏட்டுச்சுரக்காய்கள் போலத்தான் இருக்கின்றன... தகுந்த சீட்டை எடுத்துத்தந்து, 'நெல்' வாங்கிக்கொள்ளும் கிளிப்பிள்ளையைப்போல..

நிஜ வாழ்வில் எழுகிற எல்லா கேள்விகளுக்கும் விடைதரும் அளவிற்கு தேடுபொறிகள் முன்னேற்றமடையவில்லை என்பதுதான் பொதுவான கருத்து..

ஒரு உதாரணம்..

தன் வருங்கால மனைவிக்கு முகூர்த்தப்பட்டு வாங்க விரும்பிய ஒருத்தர், தேடுபொறிகளில் திரும்பதிரும்ப தேடி சோர்ந்து போய், ட்விட்டரில், 'பட்டு வாங்கவேண்டும்..' என்று ட்விட்டி (tweet) விடுகிறார்.. அவரை பின்தொடர்ந்த நன்மக்களிடமிருந்து, பல்வேறு ஆலோசனைகள்.. வழக்கம்போல 'தி.நகர் போங்கள்', 'ஈரோடு போங்கள்','காஞ்சி போங்கள்' இப்படி..

மற்றொரு பின் தொடரும் நண்பர், "பெரிய காஞ்சியின் சில இடங்களில், அசல் பட்டு குறைந்த விலையில் கிடைக்கிறது..என்னை அணுகுங்களேன்" என்று சரியாலோசனை சொல்கிறார்.. அவரை அணுகிய இவருக்கு சகாய விலையில் ஒரிஜினல் பட்டு வாங்க சாத்தியமாகிறது..



இதைப்போல, பிற மனிதர்களின் (அனுபவத்) தகவல்கள் தான் நமது அன்றாட வாழ்க்கையில் உதவுகிறது என்பதால், சமூக இணைப்புத்தளங்கள்(Social Networking Sites), தேடுபொறிகளைவிட மென்மேலும் பிரபலமடையும் என கணிக்கப்படுகின்றன..

அதுமட்டுமின்றி, நமது கைப்பேசி ஒன்றே போதும் இதுபோன்ற தளங்களில் எப்பொழுதும் இணைந்திருக்க..!!! இதுவும் இத்தளங்கள் பிரபலமடைய முக்கிய காரணமாகின்றது..

ஆனால்...

கவனம், இம்மாதிரி தளங்களில் சுயதகவல்களை சொல்லாமல் இருப்பதும், தமது செயல்பாடுகளை வெளிப்படுத்தாமல் (உதா. ஊருக்குப்போறேன்,ரெண்டு நாளாகும், சாவியை ஜன்னலில்தான் வைத்திருப்பேன் ) இருப்பதும் உத்தமம்.. அதுவே குற்றங்களுக்கு வழிவகுக்காமல், தொழில்நுட்பத்தின் முழுப்பயனைடைய உதவும்.

பின்செய்தி:

நிறப்போர்...டிசைனர்கள் உஷார்:

'நிறவெறி'க்கான போர் இல்லைங்க.. சாதாரணமான 'நிற'த்திற்கான(Color) போர்தான் !!! எதிர்காலத்தில், கம்ப்யூட்டர் டிசைனர்கள் எல்லா நிறங்களையும் நினைத்தவுடனே பயன்படுத்தமுடியாது.. அவர்கள் பயன்படுத்த ஆசைப்படும் டிசைன்களில் வண்ணங்களை புகுத்தினால், காப்புரிமை பிரச்சனை பாயும்.. உதாரணத்திற்கு, ஆரஞ்சு வண்ணத்தை Orange என்ற செல்போன் சேவை நிறுவனம், காப்புரிமை பெற்றுவைத்திருக்கிறார்கள்.. இதேபோல, அடர்சிகப்பு - Coca Cola, மெஜெண்டா - T Mobile, இப்படி.. ( மேலும் படிக்க, இக்கடச்சூடு)

2 comments:

  1. do you know anything about aardvark, its new google technology.. its more like a cyber humanoid.. you register with aardvark, and you have to give some topic headline you are familiar with like "Mobile Phone", "Chennai Tourism" etc, so if some one ask question in these area, then aardvark will transfer the question to you where you can answer.. vice verse you can ask any question you like..

    ReplyDelete
  2. @arul Sudarsanam said..

    வாங்க அருள்.. கருத்துக்கு நன்றி!

    ஆர்ட்வர்க் பற்றி இப்பொழுதுதான் அறிகிறேன்! தகவலுக்கு மீண்டும் நன்றி!

    அன்புடன்
    கார்த்திகேயன்
    http://kaaranam1000.blogspot.com

    ReplyDelete

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...