Thursday, October 7, 2010

எந்திரன் - சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்!


ற்கனவே கதை ஊகங்கள் மற்றும் விமர்சனங்கள் என நிறைய பேர் பதிவிட்டு ஓய்ந்தபின், இப்பொழுது வந்து ஏன் இந்தப்பதிவு என்றால், படத்தில் சொல்லப்பட்ட ரோபோட்டிக்ஸ், என் கவனத்தை ஈர்த்ததுதான்! நான் பட்டப்படிப்பு(2000) படிக்கும்போது, ஐசக் அசிமோவின் ரோபோ விதிகள் மனப்பாடம்!

படத்தைப்பற்றி -

(+) முதன்முதலாக, தமிழில் அறிவியல் படம். (நன்றி:சுஜாதா மற்றும் ஷங்கர்).
(+) ரஜினியின் உழைப்பு & நடிப்பு(சிட்டி)
(+) ஐஸ் டான்ஸ்
(+) ஏ.ஆர்.ரஹ்மானின் இசை
(+) கிராபிக்ஸ்



சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்
 


* சோதனையோட்டத்தில்(Beta) இருக்கும் சிட்டியை எப்படி பொது இடங்களுக்கு அனுமதியில்லாமல் அழைத்துவரலாம்?


* ரோபோ வில்லன், மிரட்டலாக இருந்தாலும், அலெக்ஸ் பாண்டியன் சாயலை தவிர்த்திருக்கலாம். ரஜினிக்கு வில்லன் ரோல் பொருத்தம் என்று ஒரு பதிவர் சொல்லியிருந்தார். அது முற்றிலும் சரி!
  
* சீ-யை ரோபோ கூட்டத்திலிருந்து கண்டுபிடிக்கும் காட்சி. அந்த இடங்களில் ரஜினி(சிட்டி)யின் நடிப்பு பிரமாதம். “இப்பொ என் கையாலே நீ சாகப்போறே!” என்று மிரட்டும் அந்தக்காட்சி படத்தில் ஹைலைட்! ”நண்பேன்டா!!!” மாதிரி புகழ் பெறக்கூடும். அந்த இடத்தில் பயமுறித்திருக்கவேண்டிய இசை பிடித்திருந்ததாலும் பயமுறுத்தவில்லை! ஏதோ சிம்பொனி மாதிரியிருக்கிறது!



* ரு ரோபோ இன்னொரு ரோபோவை தன்னிச்சையாக உருவாக்கமுடியுமா? Worst Case-ல், அத்தனை ரோபோக்களின் உருவாக்கத்திற்கும் வேண்டிய அடிப்படை பொருட்கள் - சர்க்யூட்கள் முதல் இரும்பு வரை - எங்கே எப்படி அதற்கு கிடைத்தது? Software - ஐ, காப்பி-பேஸ்ட் செய்யலாம். Hardware- ஐ காப்பி-பேஸ்ட் பண்ணமுடியாதில்லையா? அப்படியே உருவாக்கினாலும், எல்லா ரோபோக்களும் சமதிறன்களுடன் தானே இருக்கவேண்டும். தலைமை ரோபோ தவிர மற்றவை எல்லாம் ஆட்டுமந்தை போல சாதுவாக இருக்கிறதே! தங்களுக்குள் ஒரு மனிதன் இருப்பதை, தலைவன் மட்டும் தான் கண்டுபிடிக்கமுடியுமா?


Highly equipped -  என சொல்லப்படுகின்ற ரோபோக்களுக்கு மனிதனின் நடமாட்டம் தெரியவில்லையா!

* சீயின் தாடி வில்லன் வளாகத்தில் இருக்கும்போது வளரவே வளராதா? தினம்தினம் ஷேவ் செய்ய வீட்டுக்குபோகிறார் என்றால், செக்யூரிட்டி ஆக்ஸஸ் பிரச்சினையை எப்படி சரிகட்டமுடிந்தது?


* ணவே தேவைப்படாத இடத்தில் ஏன் ஃபிரிட்ஜ், கிச்சன் எல்லாம்! ”யாருமே இல்லாத கடையில...”! ஐஸ்-ஐ கடத்தி வந்தால் தேவைப்படுமென்று முன்கூட்டியே அங்கேயே இருந்ததா?


* ரோபோ-க்களுக்கு, மின்திறன் குறையும்பொழுதெல்லாம், வழியில் உள்ள மின்சாரப்பெட்டியில் இருந்தோ காரிலிருக்கும் பெட்ரோல்லிருந்தோ சார்ஜ் ஏற்றிக்கொள்வது, நல்லாயில்லைங்க!


* ரோபோக்களை அழிக்கும்போது, வெறும் கட்டளைகளை மட்டும் அழித்தாலே போதுமானது. கைகால் தலையை வெட்டிவிட்டால் உயிர்(!) போகாது!


* ரோபோ-க்கள் அறிவிலி! அறிவூட்டம் செய்வதற்கும் முன், ரஜினி, “என்னை குத்துனு சொன்னா குத்திடுவியா?”,”முட்டாள்.. ஒரு போர்வையை சுத்திக்கிட்டு வரத்தெரியாது?” என்று கேட்கும் இடங்கள் லாஜிக் ஓட்டைகள்.

* ரோபோக்களுக்கு உணர்ச்சிகள் அமைப்பது கடினம்! மனித உடலில் ஹார்மோன்கள் பயணமே அல்லது ஹார்மோன்களால் நிகழும் மாற்றமே - உணர்ச்சிகள்.


* ரு ரோபோவே பல்லாயிரக்காண பலத்தைக்கொண்டிக்கையில், ஏன் ஆயிரம் ரோபோக்கள் விதவிதமான ஜியாமெட்ரி வடிவங்களெல்லாம் செய்து, சண்டையிட வேண்டும்? கிராபிக்ஸ் பிரமாதமானாலும், நீண்ட நேர கிளைமாக்ஸ், களைப்பாகிறது!


* நீச்சலை -  படித்தல் என்பது வேறு! கற்றல் என்பது வேறு! ஒரு புத்தகத்தை படித்ததனால் மட்டுமே எப்படி ஒரு பிரசவம் பார்க்க இயலும்?

* ’மாற்றான் மனைவியை காதலிக்க முற்படும் ரோபோ’ என்ற ஒருவரி கதைக்களனை ரொம்ப பிரமாண்டமாக சொல்லியிருக்கிறார்கள். சுமார் 10 வருடங்களாக அடைகாத்த கதை. அதை அந்த சமயத்திலேயே எடுத்திருந்திருக்கலாமோ? இன்னும் பிச்சு உதறியிருக்கும்! எல்லாமே ரோபோடிக்ஸ்களின் பழைய கருத்துருக்கள்! முடிவில், ’ரோபோடிக்ஸ் படிப்பிற்கு நிறைய ஸ்கோப் உண்டு’ என்பது வேடிக்கையாக இருக்கிறது! (சுமார் பத்து வருடங்களுக்கு முன், அப்படி ஒரு தோற்றம் இருந்தது.)


* Mrs. Doubtfire (1993)-ன் பாதிப்பு கொஞ்சம் அவ்வை சண்முகியில் இருந்தால், Bicentennial Man (1999)-ன் சாயல் எந்திரனில்! இரண்டுக்கும் ஒரே ஒற்றுமை - ஃபிளப்பர் ஹீரோ - ராபின் வில்லியம்ஸ்!

NOTE:  மேலேயுள்ளவை எந்திரன் கார்ட்டூன்-நான் வரைந்தது! (நல்லாயிருக்கா?)

2 comments:

  1. நீங்க சொன்னதுல சில மட்டுமே ஏற்றுகொள்ள கூடியது. மற்றவை பதிவை நிரப்ப நீங்க போட்ட பிட்டுகள்.

    Bicentennial Man (1999)ன் பாதிப்பு இருக்கவே இல்லை. உணர்வுகள் என்ற வகையில் மட்டுமே Bicentennial Man கருத்தில் கொள்ளப்படும்.

    மற்ற படி எந்திரன் சங்கரின் இனிப்பில்லாத லட்டு. அவர் சம்பளம் என்னும் சர்க்கரை வைத்துள்ளதால் அவருக்கு இனிப்பு. நமக்கு ஒற்றைத்தலைவலி...

    ReplyDelete
  2. பார்த்த மாத்திரத்தில் தோன்றிய கருத்துக்கள், அவ்வளவே! இன்னும் நிறைய சந்தேகங்கள் உண்டு எனக்கு!(உதா. வெளியிலிருக்கும் ஒரு ரோபோவால் எப்படி ஒரு காருக்குள் இருக்கும் கணினியை செயலிழந்து வெடிக்கச்செய்யமுடிகிறது?)

    முழுமையான சயின்ஸ் பிக்‌ஷன் எடுத்தால் யாரும் தியேட்டர் பக்கம் வரமாட்டார்கள்; ஒரு டாகுமெண்டரி மாதிரி ஆகிவிடும் என்பது தெரிந்த உண்மைதான். அப்புறம் சங்கருக்கு மட்டுமில்லை, சன் பிக்சர்ஸ்க்கும் இனிப்பு இல்லை. இஞ்சிதான்!

    நவீன இயக்குனர்களுக்கு சாமர்த்தியசாலிகள். அவர்களுக்கு தெரியும், எல்லோரும் உலகப்படங்களும் பார்க்கிறார்கள் என்பது. அதனால்தான் ஒரே படத்தின் காட்சிகளை எடுக்காமல், எந்தப்படத்தில் இன்ஸ்பயர் ஆகி எடுத்தார்கள் என்பது தெரியாத மாதிரி எடுக்கிறார்கள்.

    ராணுவத்திற்கு கொடுக்கப்போகும் ரோபோ ஏன் மனித வடிவில்தான் இருக்கவேண்டுமா? வெறும் தானியங்கி கை கூட ரோபோ தானே(Robotic Arm). Stealth திரைப்படத்தில் ஒரு ராணுவ வானூர்தி தன்னிச்சையான அறிவுடன் இயங்கும். மின்னல் தாக்கி, ப்ரொகிராம் குழம்பி தங்கள் குழுவினரையே தாக்கும்.

    இப்படி சொல்லாமல் விட்டதே நிறைய இருக்கிறது... மற்றபடி, வேறுபடங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுத்தார்கள் என்பதெல்லாம் பெரிய விஷயமில்லை!

    மிக்க நன்றி WiNnY..

    தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும்;

    அன்புடன்

    ReplyDelete

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...