Saturday, November 28, 2009

இல்லாதவங்க இருந்தா என்ன, இல்லாட்டி தான் என்ன...


கெமிஸ்ட்ரியே இல்லாத பொருள்


”கெமிஸ்ட்ரியே இல்லாத பொருள் உலகத்துல எது அத்தான்? எங்க மாஸ்டர் கேட்டார்.. எங்க யாருக்கும் தெரியல” என்றாள் பத்தாம் வகுப்புக்கு போகும் கஸின்...





”ஒருவேளை, கலா மாஸ்டர் சுந்தரம் மாஸ்டர்-லாம் கெமிஸ்ட்ரியே இல்லை கெமிஸ்ட்ரியே இல்லை-ங்கிறாங்கில்லையா.  அதாயிருக்குமோனு சொன்னேன்.ஆனா அதுவும் இல்லையாம். அதான் உங்களை கேட்கச்சொன்னேன்..” என்றாள் என் மனைவியும்.


”கெமிஸ்ட்ரி இல்லாத பொருள் எதுவுமேயில்லை” என்றேன். அதேமாதிரி, பிஸிக்ஸ் இல்லாத பொருளும் உலகத்தில் இல்லை. ஒரு கல் சும்மா அசையாமல் இருத்தலும் ஒரு இயக்கமே எனறு படித்திருக்கிறோம் இல்லையா.

_________________________________________________________________________________


கொசு, கோழி, ஆடு - ஆவி ????


தெரியாமல்தான் கேட்கிறேன்.. மனிதனுக்கு மட்டும்தான் ஆவியா? மற்ற உயிரினங்களுக்குக்கிடையாதா? தினம் தினம் நூற்றுக்கணக்கில் கொசுக்களை கொன்று குவிக்கின்றோம்.. அதன் ஆன்மாவெல்லாம் உடனேவுடனே அமைதியாகிவிடுகின்றதா?


சிக்கன் மட்டனெல்லாம் ஒரு புடி புடிக்கிறோமே... அவற்றின் ஆவி எல்லாம் கசாப்புக்கடைக்காரனை ஒன்றும் செய்வதில்லையா..


சும்மா சும்மா யோசித்தால் இப்படியெல்லாம் தோன்றுகிறது.. விவரம் தெரிந்தவர்கள் விளக்கினால் உபயோகமாக இருக்கும்..



ரொம்பநாட்களுக்குமுன் படித்த சிறுகதை(கதை: சுஜாதா ??) ஞாபகம் வருகிறது.. 


ஒரு பெண் திருமணமாகி புகுந்தவீடு போகிறாள். அவளோடு அந்த வீட்டில் வளர்ந்த வெள்ளைக்குதிரையும் சீதனமாக அனுப்பப்படுகிறது.. ஏதோ ஒரு கோபத்தில், அந்தக்குதிரையை கொன்றுவிட்டு, வேறு ஒரு பழுப்புக்குதிரை வாங்கிக்கொள்கிறான் கணவன். செத்த குதிரையின் ஆவி, இந்தப்பெண்ணுக்குள் புகுந்துகொள்ள பேசும்போதெல்லாம்,  அசாதாரணமாக குதிரைகணைப்புகளும் அவளிடமிருந்து வருகிறது.. புதிய ப்ழுப்புக்குதிரைக்கும் திடீரென கால்கள் வெள்ளையாக மாறிக்கொண்டேயிருக்கின்றது..


எதனால் இப்படி என்று பார்த்தால், அந்தபொல்லாத கணவனுக்கு கள்ளக்காதலிகள் தொடர்புண்டு. தன் எஜமானிக்கு துரோகம் செய்கிறானே என்ற கோபத்தில், பழைய குதிரை அந்தமாதிரி இடங்களுக்கு வர அடம்பிடித்ததால் அதனை கொன்றிருக்கின்றான். புதிய குதிரையும் தான் போகக்கூடாத இடங்களுக்கெல்லாம் போவதற்கு வருந்தியதால், அதன் கால்கள் வெள்ளையாக மாறியது..


இறுதியில், இவளுக்கு கணைப்பு அதிகமாகி உணவில் விஷம் வைத்து கணவனை கொல்வதாக கதை முடியும்.

_________________________________________________________________________________


”இல்லாதவங்க இருந்தா என்ன, இல்லாட்டி தான் என்ன...”


இந்தியன் படத்தில் வரும் ஒரு வசனம் இது.  ஏழைகளின் உயிர் எவ்வளவு சாதாரணமாக போய்விட்டிருக்கிறது பாருங்கள்? மனதை பாதித்த வசனம் இது.




_________________________________________________________________________________


 ஒரு புதிர்


3 லி. அளவு குவளை ஒன்றும், 5 லி. குவளை ஒன்றும் உங்களுக்கு தரப்படுகிறது. இவற்றை மட்டும் பயன்படுத்தி, சரியாக 4 லிட்டர் தண்ணீர் எடுக்கவேண்டும்.. வேறெந்த குவளையும் கிடையாது.. எப்படி??

_______________________________________________________________________________

4 comments:

  1. நீங்கள் சொன்ன குதிரைக் கதையை எழுதியவர் ரா.கி.ரங்கராஜன்

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  2. நன்றிங்க.. தங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் !!!

    அமானுஷ்ய கதைகளுக்கு ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது..

    நன்றி மீண்டும் :)

    ReplyDelete
  3. take water in 5 liter and pour to 3 liter can. two liters will over flow. repeat the same to get 4 litre

    ReplyDelete
  4. வாவ் !!! வாங்க ராஜ்குமார்..

    நான் நினைத்திருந்த விடையை விட இது மிக சிறந்தது,இன்னுமொரு பாத்திரம் இருந்திருந்தால்! மிகுந்து வரும் நீர் தரைக்கு இல்ல போகும்.. ?

    இடையில் ஒரு செய்கையை விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.. 5லிருந்து, 3க்கு தண்ணீர் ஊற்றியவுடன், 2 லி வெளியேறுகிறது.. மீண்டும் 3லி. யை காலி செய்யவேண்டும். இல்லையெனில், தரையில் கிடைப்பது,7லி. ஆகிவிடும்.. :)

    முயன்றால், பாத்திரத்திலேயே 4லி. கிடைக்கும் :)

    (ஒரு நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்டது இது!)

    நல்ல முயற்சி.. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...