கெமிஸ்ட்ரியே இல்லாத பொருள்
”கெமிஸ்ட்ரியே இல்லாத பொருள் உலகத்துல எது அத்தான்? எங்க மாஸ்டர் கேட்டார்.. எங்க யாருக்கும் தெரியல” என்றாள் பத்தாம் வகுப்புக்கு போகும் கஸின்...
”ஒருவேளை, கலா மாஸ்டர் சுந்தரம் மாஸ்டர்-லாம் கெமிஸ்ட்ரியே இல்லை கெமிஸ்ட்ரியே இல்லை-ங்கிறாங்கில்லையா. அதாயிருக்குமோனு சொன்னேன்.ஆனா அதுவும் இல்லையாம். அதான் உங்களை கேட்கச்சொன்னேன்..” என்றாள் என் மனைவியும்.
”கெமிஸ்ட்ரி இல்லாத பொருள் எதுவுமேயில்லை” என்றேன். அதேமாதிரி, பிஸிக்ஸ் இல்லாத பொருளும் உலகத்தில் இல்லை. ஒரு கல் சும்மா அசையாமல் இருத்தலும் ஒரு இயக்கமே எனறு படித்திருக்கிறோம் இல்லையா.
_________________________________________________________________________________
கொசு, கோழி, ஆடு - ஆவி ????
தெரியாமல்தான் கேட்கிறேன்.. மனிதனுக்கு மட்டும்தான் ஆவியா? மற்ற உயிரினங்களுக்குக்கிடையாதா? தினம் தினம் நூற்றுக்கணக்கில் கொசுக்களை கொன்று குவிக்கின்றோம்.. அதன் ஆன்மாவெல்லாம் உடனேவுடனே அமைதியாகிவிடுகின்றதா?
சிக்கன் மட்டனெல்லாம் ஒரு புடி புடிக்கிறோமே... அவற்றின் ஆவி எல்லாம் கசாப்புக்கடைக்காரனை ஒன்றும் செய்வதில்லையா..
சும்மா சும்மா யோசித்தால் இப்படியெல்லாம் தோன்றுகிறது.. விவரம் தெரிந்தவர்கள் விளக்கினால் உபயோகமாக இருக்கும்..
ரொம்பநாட்களுக்குமுன் படித்த சிறுகதை(கதை: சுஜாதா ??) ஞாபகம் வருகிறது..
ஒரு பெண் திருமணமாகி புகுந்தவீடு போகிறாள். அவளோடு அந்த வீட்டில் வளர்ந்த வெள்ளைக்குதிரையும் சீதனமாக அனுப்பப்படுகிறது.. ஏதோ ஒரு கோபத்தில், அந்தக்குதிரையை கொன்றுவிட்டு, வேறு ஒரு பழுப்புக்குதிரை வாங்கிக்கொள்கிறான் கணவன். செத்த குதிரையின் ஆவி, இந்தப்பெண்ணுக்குள் புகுந்துகொள்ள பேசும்போதெல்லாம், அசாதாரணமாக குதிரைகணைப்புகளும் அவளிடமிருந்து வருகிறது.. புதிய ப்ழுப்புக்குதிரைக்கும் திடீரென கால்கள் வெள்ளையாக மாறிக்கொண்டேயிருக்கின்றது..
எதனால் இப்படி என்று பார்த்தால், அந்தபொல்லாத கணவனுக்கு கள்ளக்காதலிகள் தொடர்புண்டு. தன் எஜமானிக்கு துரோகம் செய்கிறானே என்ற கோபத்தில், பழைய குதிரை அந்தமாதிரி இடங்களுக்கு வர அடம்பிடித்ததால் அதனை கொன்றிருக்கின்றான். புதிய குதிரையும் தான் போகக்கூடாத இடங்களுக்கெல்லாம் போவதற்கு வருந்தியதால், அதன் கால்கள் வெள்ளையாக மாறியது..
இறுதியில், இவளுக்கு கணைப்பு அதிகமாகி உணவில் விஷம் வைத்து கணவனை கொல்வதாக கதை முடியும்.
_________________________________________________________________________________
”இல்லாதவங்க இருந்தா என்ன, இல்லாட்டி தான் என்ன...”
இந்தியன் படத்தில் வரும் ஒரு வசனம் இது. ஏழைகளின் உயிர் எவ்வளவு சாதாரணமாக போய்விட்டிருக்கிறது பாருங்கள்? மனதை பாதித்த வசனம் இது.
_________________________________________________________________________________
ஒரு புதிர்
3 லி. அளவு குவளை ஒன்றும், 5 லி. குவளை ஒன்றும் உங்களுக்கு தரப்படுகிறது. இவற்றை மட்டும் பயன்படுத்தி, சரியாக 4 லிட்டர் தண்ணீர் எடுக்கவேண்டும்.. வேறெந்த குவளையும் கிடையாது.. எப்படி??
_______________________________________________________________________________