"Are you crazy?" என்றால் இனி தவறு! "Are you crasy?" அல்லது “Are you craxy?" என்பதுதான் சரி.
’
English Language Central Commission (ELCC)’ என்றொரு அமைப்பு! தீவிர ஆலோசனை மற்றும் விவாதத்தின் முடிவில், ஆங்கிலத்தில் A-Z லிருந்து, Z மட்டும் நீக்கிவிடுவது பற்றி முடிவெடுத்துள்ளது. இந்த எழுத்திற்கென்று தனியாக எந்தவோரு ஒலியமைப்பும் இல்லாததே இதற்குக்காரணம்!
இங்கே பாருங்கள்
இதையும் பாருங்கள்
Zebra, zero, zodiac, zorro போன்ற இடங்களில் ”S” ஒலியோ அல்லது "X" ஒலியோ பெற்றிருப்பதால், தனியாக எதற்கு ஒரு எழுத்து என்ற ரீதியில் யோசிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது! அதனால், இனிமேல் zero இல்லை. xero தான். zoo இல்லை xoo! zone, இனி xone. zodiac, இனி xodiac ஆகும்!

மானாட மயிலாட-வில், இனி “
amazing performance” கிடையாது. Amasing அல்லது Amaxing(!!!???) தான். அதேபோல, நகைச்சுவை வசனகர்த்தா
Crasy Mohan அல்லது
Craxy Mohan என்பதே சரி.

யாராவது தூங்குவதாக கார்ட்டூன் வரைந்தால், Xxxxxxxxx தான், Zzzzzzzz கிடையாது!
அய்யய்யோ நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கே! கண்ணக்கட்டுதே! என்ன பண்ணுவேன்!
இருங்க இருங்க... இப்போ என்ன நடந்துபோச்சுனு இப்படி புலம்புறீங்க!
மீண்டும் இங்கே பாருங்க
ஆமாங்க.. நம்ம Z நம்மள விட்டுட்டு எங்கும் போகல! சும்மா பயபுள்ளய ’ஏப்ரல் பூல்’ கொண்டாடியிருக்குதுங்க! இந்தப்
புரளி, சாதாரண வாசகனிலிருந்து, கூகிள் வீக்கிப்பீடியா,டிவிட்டர் வரை பெரிய அதிர்வை ஏற்படுத்தியதாம்!
மாநகர பேருந்து-தோறும், ’தமிழ் செம்மொழி மாநாடு,
சூன் 23’ என்ற வாக்கியம் அதே அதிர்வை என்னுள் ஏற்படுத்தியது! ஜூன் 23 என்றோ அல்லது அந்த தமிழ் மாதத்தின் பெயரேயோ குறிப்பிட்டிருக்கலாமோ என்று தோன்றியது.
தயவுசெய்து படித்த பிறகு மறவாமல் வாக்களிக்கவும் :)