Sunday, March 8, 2009

காகித ப்ரொஜெக்ட்கள் !!!

நமது நாட்டில் மட்டும் சுமார் 18 மெகா ப்ரொஜெக்ட்கள், இன்னும் காகித அளவிலேயே உள்ளது என்பது தெரியுமா ??

இந்த திட்டங்கள் நிறைவேறினால் மட்டும், 1,64,000 பேருக்கு நேரடியான வேலைவாய்ப்பும், 2,70,000 பேருக்கு மறைமுகமான வேலைவாய்ப்பும் கிட்டும் என்பது தெரியுமா?

ஆம், கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக(2003) வெறும் ஒப்பந்தம் வடிவிலோ, MoU மாதிரியோ இருக்கும் இந்த திட்டங்களினால் நாம் இழந்தது, 3 லட்சம் அளவினாலான வேலைவாய்ப்புக்களை.

ஏன் இந்த தாமதம்???

இந்த காலதாமதம், இடம் ஒதுக்குதல் நடைமுறைகளால் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள்..

'போஸ்கோ' எனும் இரும்பு கம்பெனி மட்டும், இந்தியாவில் வெறும்(!!!) ரூ.176 கோடி முதலிட்டால், சுமார் 35,730 பேருக்கு வேலை கிடைக்கும்.

சென்னையிலும் ஜேவி என்ற நிறுவனம் ரூ.4000 கோடி முதலீடு செய்தால், சுமார் 5000 பேருக்கு வேலை கிடைக்கும்..

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ, இன்ஃபியும் 750 கோடி ரூபாய் முதலீடு செய்யின், சுமார் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று மென்மேலும் புகையை கிளப்புகிறார்கள்..!!!

சூழ்நிலையை மேலும் புகைமண்டலமாக்க(!!!), இங்கே க்ளிக்கவும்..

இந்த ப்ராஜெக்ட் எல்லாம் நிஜத்திற்கு வர, கடவுளையும், அந்தந்த மாநில அரசுகளையும் வேண்டிகொள்வோம்...

4 comments:

  1. நமது அரசாங்கத்தின் மெத்தனத்திற்கு ஒரு சாட்சி.. மக்கள் நலத்தை இவர்கள் மதிப்பது கிடையாது.. உங்கள் அக்கறையை பாராட்டுகிறேன் நண்பா.. தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  2. aan ithae than padichaen ana pinnotatha athila pottutaen ... valga

    ReplyDelete
  3. //கார்த்திகைப் பாண்டியன் said...

    நன்றி கார்த்திகை பாண்டியன் ....
    இவை நியாயமான காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் (such as - delay in land acquisition procedures, less availability of mines) என்பதினால், நிச்சயம் நடைமுறைக்கு வரும் என்று நம்புவோமாக..

    அன்புடன்
    காரணம் ஆயிரம்

    ReplyDelete
  4. // Suresh said...

    நன்றி சுரேஷ் ...
    பவர்கட் ஆனாலும், மறவாமல் பின்னூட்டமிட்டதற்கு நன்றி... :)

    ReplyDelete

தங்களுடைய மேன்மையான கருத்துக்களை இங்கே தரவும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. மீண்டும் வருக

இன்னிசை அளபெடை சினிமாவிலா ?

கே ப்டன்   விஜயகாந்த் அவர்கள் தோன்றும் திரைப்பாடல்களில், ' இன்னிசை அளபெடை '-யை எளிதாகக்காணலாம் ( இன்னிசை அளபெடை  என்பது செய்யுளை இனி...