3=4 என்பது மாதிரி ஒரு தப்புக்(கஷ்டக்)கணக்கை கொடுத்து, என்னையும் சிந்திக்க வைத்தான் என் குழு நண்பன்.
அப்புறம் என்னாச்சு? தோல்வியை ஒப்புக்கொண்டு, கேண்டீனில் குழிப்பணியாரம் ஸ்பான்சர் செய்யவேண்டியதாகிவிட்டது! ;(
அதெல்லாம் சரி..
3=3 சரி
4=4 ஓகே
எப்படி 3=4 ஆகும் ?
இதோ இப்படித்தான்...
படம் 1.
விளக்கம்
1) -12 என்ற எண்ணை (9-21) மற்றும் (16-28) என்று இரு விதமாக எழுதலாம்.
2) இரு பக்கமும் (49/4) என்ற பின்னத்தால் கூட்டுகிறேன்.
3) ஒரு வசதிக்காக, 21=(2x3x7/2) என்றும், 28=(2x4x7/2) என்றும் குறிப்பிடுகிறேன்.
4) அது ஒரு குறிப்பிட்டிருக்கின்ற சமன்பாட்டினை ஒத்திருப்பதால், அடுத்த வரியில், அந்த சமன்பாட்டை பயன்படுத்துகிறேன்.
5) இரு பக்கமும், Square root எடுக்கிறேன்.
6) இரு பக்கமும் (7/2) -வை தவிர்த்தால், விடை...
அட ஆமாம்!!!