எதிர்காலத்தில், டாக்டர், வக்கீல், ஆடிட்டர்கள் போல, கணினி வல்லுனர்களும் தனியாகவோ (அல்லது குழுவாகவோ) ஒரு அறை மட்டுமே எடுத்து, 'இங்கு ஆர்டரின் பேரில் தரமான மென்பொருள் செய்து தருகிறோம்' என போர்டு போட்டுக்கொண்டு, பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பணிபுரிவதற்கான காலம் வரும்..
காரணம் - Crowdsourcing !!!
சமீபகாலமாக, இணையத்தில் மெல்ல மெல்ல பரவலாக பாவிக்கப்படும் இந்த உத்திதான், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்போகும் விஷயமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது..
Crowdsourcing - அப்படீன்னா என்ன?ஒரு கம்பெனிக்கோ, ஒரு தனிமனிதருக்கோ ஒரு வேலை/பணி செய்யவேண்டியதிருக்கிறது. என்ன செய்வார்? காசிருந்தால் outsource செய்வார்.. ஆனால், 'செய்யவேண்டிய பணி, பெரிய பணி... அதற்கு நிறைய பேர் வேண்டும், சிறந்த தரத்துடன் வெளியீடுகள்(solutions) வேண்டும்' என்று தோணினால், crowdsource செய்வார்..
அதாவது, பொது ஊடகங்களில், இந்த பணி(problem/task) பற்றி தண்டோரா போட்டு அறிவித்துவிடுவார்.. சிறு சிறு குழுக்களாக தங்களை அறிவித்துக்கொள்கிற மென்பொருள் நிபுணர்கள் அல்லது டிசைனர்கள், தங்களுக்கு
ஆர்வமுள்ள சில பணிகளை எடுத்துசெய்து தீர்வுகள்(solutions) காண்பார்கள்.. எத்தனை தீர்வுகள் வருகி்ன்றதோ, அத்தனையும், பிற்பாடு Task அறிவித்தவருக்கே சொந்தமாகிறது.. அவர் அதை அப்படியே பயன்படுத்திகொள்ளலாம்.. மாற்றமும் செய்யலாம்.. (இன்னாருடைய தீர்வை பயன்படுத்துகிறோம் என்று சொல்லிவிடுவார்கள்) பின் ஒரு திட்ட மேலாளர் போல செயல்பட்டு ஒருங்கிணைப்பார்கள்...
பெரும்பாலான சமயங்களில், பணியை எடுத்து செய்பவர்களுக்கு முழுவிவரங்களும் தெரிய வாய்ப்பில்லாமல் போவதுண்டு .. உதாரணத்திற்கு, 10000 சென்ட்கள்
[#12]. சுமாராக, 5 மாதத்தில், 51 நாடுகளிலிருந்து, 10000 ஓவியர்கள் ஒரு ஒரு புள்ளி மட்டுமே வைத்து வரைந்த ஓவியம். வரைந்து முடித்துபின் மேலாளர் ஒருங்கிணைத்து அறிவித்தபின்னரே தாங்கள் இதற்காகத்தான் பணிபுரிந்திருக்கிறோம் என்று அவர்களுக்கு தெரியவந்தது..
பணி எடுத்து செய்பவர்களுக்கு என்ன($) தருவார்கள்???பெரும்பாலானவர்கள் இந்த பணிக்கு இவ்வளவு தருவோம் என்று சொல்லிவிடுவார்கள்.. இதற்காக சில தளங்களும் உண்டு.. (தகவல் சற்று கீழே). பணிக்கு ஊதியமாக, பணம் தராமல், சான்றிதழ்கள், அன்பளிப்புகள் தரலாம்.. இன்னும் சிலர், "தங்களுடைய விடா முயற்சியையும் தன்னம்பிக்கையையும் பாராட்டி எங்கள் கம்பெனி அளிக்கக்கூடிய ஒரு அதிசயப்பொருள் இந்த சோப்பு டப்பா" - என்ற அதிர்ச்சியையும் தருவார்கள்.. இணையத்தில் இவ்வாறான 'சோப்பு டப்பா அன்பளிப்பு' கம்பெனிகள் நிறைய இருக்கிறார்கள் என்பது தெரிந்த செய்திதான்!!! ஆனாலும், இந்த (வெறும்) பாராட்டுக்களையும்கூட தங்களுடைய ரெஸியூமில் அள்ளிப்போட்டுக்கொண்டு போகிறவர்களும் இருக்கிறார்கள்..அது அவர்களுடைய Career Development-ற்கு உதவக்கூடுமாம்..
வீக்கிப்பீடியா போன்ற தகவல் களஞ்சியங்கள்,கூகிள் எர்த், ஆன்லைன் குழுமங்கள், forum-கள், ப்ளாக்குகள்,யூ-ட்யூப், ட்விட்டர், லொட்டு லொசுக்கு..ஏன் ஒரு விளையாட்டு
[#11] கூட உள்ளது.. இப்படி எல்லாமே crowdsourcing-ன் சாயல்களே... என்ன, இவற்றுக்கெல்லாம் பைசா கிடையாது.. தபால்தலை சேகரிப்பவர்கள், காசுக்காகவா செய்கிறார்கள்.. அதுபோலத்தான் இதுவும்!
காசு தரக்கூடிய வலைதளங்களும் உண்டு.. உதாரணத்திற்கு, குரு
[#1], 99டிசைன்ஸ்
[#2], இன்னொசென்டிவ்
[#3], எம்-டர்க்
[#4], ஆகியன..
அழகழகாக டீசர்ட் டிசைன் செய்து அல்லது பஞ்ச் வாசகங்கள் பதித்து சம்பாதிக்க ஆசையா.. (சினிமா பஞ்ச் கூடவே கூடாது) இப்படிப்பட்டவர்களுக்கானதுதான் இந்த த்ரெட்லெஸ்
[#5]. நல்ல டிசைன்கள், வாசகங்களுக்கு வாக்களித்தாலும் பரிசுகள் உண்டு.. இங்கே முக்கியப்பணிகள் எல்லாவற்றையும் open call-ல் அறிவிக்கிறார்கள்.. (New Update:டீ-சர்ட் டிசைன் பற்றி கற்றுகொள்வதற்கான தளங்களின் விவரங்கள் கீழே
[#14])
நிறுவனங்கள், அமைப்புகள்,(நம்மூரில் கழகங்கள், குழந்தைகள் போல) ஆகியவற்றுக்கு நல்ல நல்ல பெயர்களை வைக்கவும், சிறந்தவற்றுக்கு வாக்களிக்கவும் அழைப்பு விடப்படுகின்றது..
[#7]. பெயர்சூட்டலுக்கும், வாக்களிப்புக்கும் பரிசு.
Crowdsourcing - ஒரு வரப்பிரசாதமா??குழப்பம்தரும் கேள்வி.. சின்னச்சின்ன பணிகளுக்கு, தரமான தீர்வுகளை வேண்டும் என நினைக்கும் சிறு நிறுவனங்களுக்கு, இது வரப்பிரசாதம்தான்..
பெரும் வர்த்தகப்பணிகளை பிரித்துத்தருவது மற்றும் ரகசியம் காக்கப்படவேண்டிய(confidential) பணிகள் ஆகியவைகளை crowdsource பண்ணுவது உசிதமல்ல.. Outsourcing-கில், ஒப்படைத்த பணி தாமதமானால், 'ஏய்யா லேட்டு?' என்று கேட்கலாம்.. Crowdsourcing-கில், அது முடியாது.. அவர்களாக பார்த்து முடித்துத்தந்தால்தான் ஆச்சு.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் தருவார்கள்.. முடிக்காமல் விடவும் சாத்தியம் அதிகம்..ஏனெனில்,இங்கே சேவை கால ஒப்பந்தம்(SLA) கிடையாது..
இன்னொருபக்கம், பணியை எடுத்துக்கொண்டு சன்மானம் தராமல் ஏமாற்றுகிற ஆன்லைன் நிறுவனங்கள் அதிகம் இருப்பதை இதன் பிரபலத்திற்கு பின்னடைவாக கருதலாம்..
பணிகள் பற்றிய அறிவிப்புகள் இந்த தளங்களில்:1)
குரு2)
99டிசைன்ஸ்3)
இன்னோசென்டிவ்4)
எம்-டர்க்5)
டீசர்ட் டிசைனிங்,டீசர்ட்டில் வாசகங்கள், வாக்களிப்புகளுக்கு பரிசுகள்6)
என் ஐடியா7)
பேரு வக்ய எங்களுக்கு உதவுங்கள்மேலும் படிங்க இங்கே,
8)
வேறு சில பணிவாய்ப்புகள்9)
135 சிறு தொழில்களின் தொகுப்பு(சி.தொ. வடிவமாகவே, crowdsourcing பார்க்கப்படுகிறது...கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒன்று)
10)
பணி அறிவிக்கும் ப்ளாக்11)
Game with a purposeக்கு, ஒரு நல்ல உதாரணம்12)
10000 சென்ட்கள்13)
எங்களுக்கு ஐடியா சொல்லுங்க 14)
டீ-சர்ட் டிசைன் கற்றுகொள்ள (New Update)
ஆதாரம்: *
அவுட்சோர்ஸிங் அவ்ளோதானா?!!*
வீக்கிப்பீடியா*
பத்தாயிரம் சென்ட்கள்*
தி ஹிண்டு.* ஆனந்த விகடன்.
* * * * * * * * * * * *
இன்றைய ஆச்சர்யம்: சேலத்தில், விபத்தில் சிக்கி, கோமாவிலிருந்த ஒரு சிறுபிள்ளையை, சுயநினைவுக்கு மீட்டெடுக்க உதவியாக இருந்தது -
வடிவேலுவின் காமெடிக்காட்சிகளே! (நன்றி: குமுதம்)