Tuesday, November 2, 2010

Cartooning - வரைய ஆரம்பிக்கின்றேன்!

பெரிய அளவில், ஓவியப்போட்டிகளில் வெற்றிபெறாவிட்டாலும் கேலிச்சித்திரங்கள் வரைவதில் மட்டும் ஒரு ஆர்வம் உண்டு எனக்கு! Just ஒரு Hobbyist! அவ்ளோதான்!

புதிதாக வாங்கிய பென்-டேப்ளட்டில் சில கார்ட்டூன்கள் வரைந்துபார்த்தேன்... நல்லாயிருக்கா???

இனி என் பதிவுகளில் சில கார்ட்டூன்கள் எட்டிப்பார்க்கும்.. :)


கீழே உள்ளது - Self Caricature!!! ஹி.. ஹி.. ஹி..


உங்கள் பதிவுகளுக்கும் கேலிச்சித்திரங்கள் மற்றும் கார்ட்டூன்கள் வேண்டுமா?

பிற பதிவர்களின் பதிவுகளுக்கும் கேலிச்சித்திரங்கள் வரைய ஆர்வமாக இருக்கிறேன். இலவசமாகத்தாங்க! கவிதை மற்றும் சில சிறுகதை வகைகள் தவிர்த்து மற்ற அனைத்து வகைப்பதிவுகளுக்கும் கார்ட்டூன்கள் வரைய முடியும்! விருப்பம் உள்ளவர்கள் கீழ்குறித்த மின்னஞ்சலில் என்னை அணுகவும்..

cartoonmyhobby(at)gmail(dot)com

Monday, November 1, 2010

எண்ணச்சிதறல்கள் ... (02/11/2010)

ரே விஷயத்தைப்பற்றி நிறைய எழுதுவதைவிட, சில  விஷயங்களைப்பற்றி குறுந்தகவல்களாக குறிப்பிடுவது சுலபமாக இருக்கிறது. குறைந்த நேரத்தில் நிறைய தகவல்கள் பகிர்ந்துகொள்வதும் சுவாரஸியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-


பூக்கள் பூக்கும் தருணம்

னது வயதுக்கும் மீறிய படைப்பை தந்திருக்கும் G.V.பிரகாஷ், எட்டுக்கும் மேற்பட்ட ராகங்களை இந்த பாடலில் பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்! தனது வாழ்நாளுக்கும் பெருமை தரும் இந்தப்பாடலை தந்தவர், இன்னும் சிறப்பான பாடல்களை தரவேண்டும் - வாழ்த்துக்கள். பூக்கள் பூக்கும் தருணம் ரசிக்க இங்கே கிளிக்கவும்... 


மதராசப்பட்டினம் படமும், பக்கா! சமீபத்தில் வந்த மிக சிறந்த படங்களில் ஒன்று எனலாம்! டைட்டானிக், லகான் - ன் சாயல் என்று வெறுமனே சொல்லிவிடுவது, இந்த படத்திற்கு நாம் செய்யும் அவமரியாதை என்று படுகிறது.. இளைய எமி மட்டுமில்லை.. வயதான எமியாக வரும் கமல்-சாயல்-பாட்டியின் கம்பீரமான நடிப்பும் பிடித்திருந்தது..

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-


கமலும் சர்ச்சையும்

விஜய் டிவி, காபி வித் அனு-வின் ப்ரமோவில் இன்று, கமல், பக்தி பற்றிய சர்ச்சையான தன் கருத்தைக்குறிப்பிடுகிறார், அதுவும் தன் அண்ணன் மகளை வைத்துக்கொண்டு! சும்மா இருக்கமாட்டாரே..

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-


டண் டணா டண்..

ன் டாரக்ட் விளம்பரத்தில், டாக்டர் ட்யூனிங் போர்கை தட்டி காதில் வைக்கவும், ‘டூஊஊஊஊஊ’ என்ற அவர் சொல்வது, வேடிக்கையாக இருக்கின்றது :))

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-


பழைய பாடல்கள் - புதிய குரல்கள் !


யூட்யூபில் காணக்கிடைக்கும் இந்த வீடியோக்களில் இவர்கள் பாடும் பழைய பாடல்களில், இனிமை மாறாமல் இருப்பதற்கு முக்கியக்காரணம் - இசைஞானி!

என்ன சத்தம் இந்த நேரம்...
கரோகி, வீடு முழுதும் ஸ்பீக்கர்கள், மைக்கில் பாடல் - என இவர் பண்ணும் அமர்க்களம் ரசிக்க வைக்கின்றது.. அக்கம்பக்கத்தவர்கள் ஒன்று சொல்லவில்லையா? இந்த தந்தை-மகள் போலவே, நானும் என் மகளுக்கு  நல்ல Friend-ஆக இருக்கவேண்டும் என்பது என் மனைவி ஆசை! எனக்கு முக்கியமாக பாட வராது! நான் தாலாட்டு பாடி, என் (இரண்டு வயது) மகள் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டது, ஒரு Discouraging -ஆன நிகழ்வு  ;( அவரவர்க்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்ய வேண்டும்போலிருக்கிறது :)) காணொளி மற்றும் பாடலைக்கேட்க இங்கே கிளிக்கவும்!!!

குழலூதும் கண்ணனுக்கு..
வேகமாக பாடுவதும், சில டெக்னிக்கல் தவறுகள் இருப்பதும் குறையாக தெரியாது! காணொளி மற்றும் பாடலை கேட்க இங்கே கிளிக்கவும்!

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-


எந்திரன் - சிட்டி


  டப்பிடிப்பு முடிந்ததும், எந்திரன் சிட்டியை, Stan Winston Studios-வுக்கே தந்துவிடவேண்டும் என்பது ஒப்பந்தமாம்! அதன்படியே இப்பொழுது, டெர்மினேட்டர் ஆர்னால்ட் ரோபோவுக்கு அருகில் நம் சிட்டியும்! (நன்றி : குமுதம்). இங்கே அருகே சிட்டி வேற -  
தீபாவளி நல்வாழ்த்துக்களுக்காக!!!

-oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo- -oOo-

Sunday, October 10, 2010

3=4 என்பது தப்புக்கணக்கா?

நான் பாட்டுக்கு செவனேன்னுதானே இருந்தேன் !!!

3=4 என்பது மாதிரி ஒரு தப்புக்(கஷ்டக்)கணக்கை கொடுத்து, என்னையும் சிந்திக்க வைத்தான் என் குழு நண்பன்.

அப்புறம் என்னாச்சு? தோல்வியை ஒப்புக்கொண்டு, கேண்டீனில் குழிப்பணியாரம் ஸ்பான்சர் செய்யவேண்டியதாகிவிட்டது! ;(

அதெல்லாம் சரி..

3=3 சரி
4=4 ஓகே
எப்படி 3=4 ஆகும் ?

இதோ இப்படித்தான்...

படம்  1.

விளக்கம்
1)   -12  என்ற எண்ணை  (9-21) மற்றும் (16-28) என்று இரு விதமாக எழுதலாம்.
2)  இரு பக்கமும் (49/4) என்ற பின்னத்தால் கூட்டுகிறேன்.
3)  ஒரு வசதிக்காக, 21=(2x3x7/2) என்றும், 28=(2x4x7/2) என்றும் குறிப்பிடுகிறேன்.
4) அது ஒரு குறிப்பிட்டிருக்கின்ற சமன்பாட்டினை ஒத்திருப்பதால், அடுத்த வரியில்,  அந்த சமன்பாட்டை பயன்படுத்துகிறேன்.
5) இரு பக்கமும், Square root எடுக்கிறேன்.
6) இரு பக்கமும் (7/2) -வை தவிர்த்தால், விடை...

அட ஆமாம்!!!

Thursday, October 7, 2010

எந்திரன் - சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்!


ற்கனவே கதை ஊகங்கள் மற்றும் விமர்சனங்கள் என நிறைய பேர் பதிவிட்டு ஓய்ந்தபின், இப்பொழுது வந்து ஏன் இந்தப்பதிவு என்றால், படத்தில் சொல்லப்பட்ட ரோபோட்டிக்ஸ், என் கவனத்தை ஈர்த்ததுதான்! நான் பட்டப்படிப்பு(2000) படிக்கும்போது, ஐசக் அசிமோவின் ரோபோ விதிகள் மனப்பாடம்!

படத்தைப்பற்றி -

(+) முதன்முதலாக, தமிழில் அறிவியல் படம். (நன்றி:சுஜாதா மற்றும் ஷங்கர்).
(+) ரஜினியின் உழைப்பு & நடிப்பு(சிட்டி)
(+) ஐஸ் டான்ஸ்
(+) ஏ.ஆர்.ரஹ்மானின் இசை
(+) கிராபிக்ஸ்சில கேள்விகளும்/சிலாகிப்புகளும்
 


* சோதனையோட்டத்தில்(Beta) இருக்கும் சிட்டியை எப்படி பொது இடங்களுக்கு அனுமதியில்லாமல் அழைத்துவரலாம்?


* ரோபோ வில்லன், மிரட்டலாக இருந்தாலும், அலெக்ஸ் பாண்டியன் சாயலை தவிர்த்திருக்கலாம். ரஜினிக்கு வில்லன் ரோல் பொருத்தம் என்று ஒரு பதிவர் சொல்லியிருந்தார். அது முற்றிலும் சரி!
  
* சீ-யை ரோபோ கூட்டத்திலிருந்து கண்டுபிடிக்கும் காட்சி. அந்த இடங்களில் ரஜினி(சிட்டி)யின் நடிப்பு பிரமாதம். “இப்பொ என் கையாலே நீ சாகப்போறே!” என்று மிரட்டும் அந்தக்காட்சி படத்தில் ஹைலைட்! ”நண்பேன்டா!!!” மாதிரி புகழ் பெறக்கூடும். அந்த இடத்தில் பயமுறித்திருக்கவேண்டிய இசை பிடித்திருந்ததாலும் பயமுறுத்தவில்லை! ஏதோ சிம்பொனி மாதிரியிருக்கிறது!* ரு ரோபோ இன்னொரு ரோபோவை தன்னிச்சையாக உருவாக்கமுடியுமா? Worst Case-ல், அத்தனை ரோபோக்களின் உருவாக்கத்திற்கும் வேண்டிய அடிப்படை பொருட்கள் - சர்க்யூட்கள் முதல் இரும்பு வரை - எங்கே எப்படி அதற்கு கிடைத்தது? Software - ஐ, காப்பி-பேஸ்ட் செய்யலாம். Hardware- ஐ காப்பி-பேஸ்ட் பண்ணமுடியாதில்லையா? அப்படியே உருவாக்கினாலும், எல்லா ரோபோக்களும் சமதிறன்களுடன் தானே இருக்கவேண்டும். தலைமை ரோபோ தவிர மற்றவை எல்லாம் ஆட்டுமந்தை போல சாதுவாக இருக்கிறதே! தங்களுக்குள் ஒரு மனிதன் இருப்பதை, தலைவன் மட்டும் தான் கண்டுபிடிக்கமுடியுமா?


Highly equipped -  என சொல்லப்படுகின்ற ரோபோக்களுக்கு மனிதனின் நடமாட்டம் தெரியவில்லையா!

* சீயின் தாடி வில்லன் வளாகத்தில் இருக்கும்போது வளரவே வளராதா? தினம்தினம் ஷேவ் செய்ய வீட்டுக்குபோகிறார் என்றால், செக்யூரிட்டி ஆக்ஸஸ் பிரச்சினையை எப்படி சரிகட்டமுடிந்தது?


* ணவே தேவைப்படாத இடத்தில் ஏன் ஃபிரிட்ஜ், கிச்சன் எல்லாம்! ”யாருமே இல்லாத கடையில...”! ஐஸ்-ஐ கடத்தி வந்தால் தேவைப்படுமென்று முன்கூட்டியே அங்கேயே இருந்ததா?


* ரோபோ-க்களுக்கு, மின்திறன் குறையும்பொழுதெல்லாம், வழியில் உள்ள மின்சாரப்பெட்டியில் இருந்தோ காரிலிருக்கும் பெட்ரோல்லிருந்தோ சார்ஜ் ஏற்றிக்கொள்வது, நல்லாயில்லைங்க!


* ரோபோக்களை அழிக்கும்போது, வெறும் கட்டளைகளை மட்டும் அழித்தாலே போதுமானது. கைகால் தலையை வெட்டிவிட்டால் உயிர்(!) போகாது!


* ரோபோ-க்கள் அறிவிலி! அறிவூட்டம் செய்வதற்கும் முன், ரஜினி, “என்னை குத்துனு சொன்னா குத்திடுவியா?”,”முட்டாள்.. ஒரு போர்வையை சுத்திக்கிட்டு வரத்தெரியாது?” என்று கேட்கும் இடங்கள் லாஜிக் ஓட்டைகள்.

* ரோபோக்களுக்கு உணர்ச்சிகள் அமைப்பது கடினம்! மனித உடலில் ஹார்மோன்கள் பயணமே அல்லது ஹார்மோன்களால் நிகழும் மாற்றமே - உணர்ச்சிகள்.


* ரு ரோபோவே பல்லாயிரக்காண பலத்தைக்கொண்டிக்கையில், ஏன் ஆயிரம் ரோபோக்கள் விதவிதமான ஜியாமெட்ரி வடிவங்களெல்லாம் செய்து, சண்டையிட வேண்டும்? கிராபிக்ஸ் பிரமாதமானாலும், நீண்ட நேர கிளைமாக்ஸ், களைப்பாகிறது!


* நீச்சலை -  படித்தல் என்பது வேறு! கற்றல் என்பது வேறு! ஒரு புத்தகத்தை படித்ததனால் மட்டுமே எப்படி ஒரு பிரசவம் பார்க்க இயலும்?

* ’மாற்றான் மனைவியை காதலிக்க முற்படும் ரோபோ’ என்ற ஒருவரி கதைக்களனை ரொம்ப பிரமாண்டமாக சொல்லியிருக்கிறார்கள். சுமார் 10 வருடங்களாக அடைகாத்த கதை. அதை அந்த சமயத்திலேயே எடுத்திருந்திருக்கலாமோ? இன்னும் பிச்சு உதறியிருக்கும்! எல்லாமே ரோபோடிக்ஸ்களின் பழைய கருத்துருக்கள்! முடிவில், ’ரோபோடிக்ஸ் படிப்பிற்கு நிறைய ஸ்கோப் உண்டு’ என்பது வேடிக்கையாக இருக்கிறது! (சுமார் பத்து வருடங்களுக்கு முன், அப்படி ஒரு தோற்றம் இருந்தது.)


* Mrs. Doubtfire (1993)-ன் பாதிப்பு கொஞ்சம் அவ்வை சண்முகியில் இருந்தால், Bicentennial Man (1999)-ன் சாயல் எந்திரனில்! இரண்டுக்கும் ஒரே ஒற்றுமை - ஃபிளப்பர் ஹீரோ - ராபின் வில்லியம்ஸ்!

NOTE:  மேலேயுள்ளவை எந்திரன் கார்ட்டூன்-நான் வரைந்தது! (நல்லாயிருக்கா?)

Tuesday, September 7, 2010

Fake Recruitment Letter !!! (Beware)


’செவப்பா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’  மாதிரி, ’நுனிநாக்கு ஆங்கிலம் பேசுறவன் ஃபிராடா இருக்கமாட்டான்’-னு நம்மிடையே ஒரு கருத்து நிலவுகிறது.. அதனால்தான் கீழே உள்ளது போல ஒரு மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றால் சட்டென சந்தேகம் வருவதில்லை.. ஏமாந்துவிடுகிறோம்!
இந்தமாதிரி பொய்ப்பித்தலாட்ட மின்னஞ்சல்களுக்கெல்லாம் அடிப்படையில் ஃபார்மெட் ஒன்றே! ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரில் அனுப்பப்பட்ட (போலி) பணிநியமன கடிதத்தை கீழே பார்க்கவும் -

----- Forwarded Message ----
From: VIDEOCON ELECTRONICS LIMITED <info@videocon.co.in>
Sent: Thu, 2 September, 2010 8:08:52 PM
Subject: RECRUITMENTS OFFER

REF: "VIDEOCON" DIRECT RECRUITMENTS OFFER.

Your Resume has been selected for our new plant. The Company selected 62 candidates list for IT,Administration,Production, marketing and general service Departments, It is our pleasure to inform you that your Resume was selected as one of the 62 candidates shortlisted for the interview. The Company VIDEOCON is a brand name in Electronics manufacturing business in India, The Company is recruiting the candidates for our new plants in Delhi,Bangalore, Pune and mumbai.

Your interview will be held at The Company Corporate office in New Delhi on 13th September at 11.30 AM, You will be pleased to know that The 62 candidates selected 55 candidates will be giving appointment, Meaning that your Application can progress to final stage. You will have come to The Company corporate office in New Delhi. Your offer letter with Air Ticket will be sent to you by courier before date of interview. The Company can offer you a salary with benefits for this post 35, 000/- to 2, 00, 000/- P.M. + (HRA + D.A + Conveyance and other Company benefits. The designation and Job Location will be fix by Company HRD. At time of final process. You have to come with photo-copies of all required documents.

REQUIRED DOCUMENTS BY THE COMPANY HRD.
======================================
1) Photo-copies of Qualification Documents.
2) Photo-copies of Experience Certificates (If any)
3) Photo-copies of Address Proof
4) Two Passport Size Photograph.

You have to deposit the (Cash) as an initial amount in favor of Company HRD. Department. for Rs. 10,200/- ( Ten thousand two hundred rupees ) through any [STATE BANK OF INDIA] Branch from your Home City to Company Senior HRD. Account NO, which well be send to you upon your response. This is a refundable interview security. Your offer letter with Air tickets will be sent to your Home Address by courier after receiving the confirmation of interview security deposited in STATE BANK OF INDIA. This Company will pay all the expenditure to you at the time of face-to-face meeting with you in Company. The Job profile, salary offer, and date -time of interview will be mention in your offer letter. Your offer letter will dispatch very shortly after receiving your confirmation of cash deposited in STATE BANK OF INDIA.

We wish you the best of luck for the subsequent and remaining stage. The last date of security deposited in bank 8th of September 2010 You have to give the information after deposited the security amount in bank to The Company HRD - direct recruitment via email. Your Letter with supporting document will be dispatch same time by courier to your postal address after receipt of security deposited confirmation in bank. The interview process and arrangement expenditure will be paid by VIDEOCON. Lodging, traveling and local conveyance actual will be paid by VIDEOCON as per bills. The candidate has to deposit the initial refundable security as mentioned by HRD.

NB: You are advice to reconfirm your mailing address and phone number in your reply. and 10,000/- ( Ten thousand rupees ) will be the refundable amount, as 200 rupees will be deducted as bank charges for funds deposit. and if you are been selected or not, still the amount will be refunded to you, as the amount is just to prove that you will be coming for the interview in order for us not to run at lost after sending you the air ticket and you don't show up on the day of interview.

Wishing you the best of lucks

Regards
MR.DEEPAK SHARMA - (Executive - HRD)
MR.MAXWELL ERICSON - (SECRETARY)
Videocon Electronics India Ltd.
H.O. - 174, Videocon House,
G.K. Part – 1, Greater Kailash.


திருடுவதில் இது மிகப்பழைய டெக்னிக்! மீண்டும் மீண்டும் ஏமாந்தால் அது ஏமாற்றியவனின் குற்றமில்லை !

Saturday, August 14, 2010

Circle the cat (addictive game) எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க பாருங்க!

ரு சவாலான பூனை! இங்கே அங்கே நகரவிடாமல் அதனை ஒரு பொறியில் சிக்கவைக்கவேண்டும்.. இதுதான் சுவாரஸியம்.. என் அலுவலகத்தில் இந்தப்பூனை ரொம்ப பிரபலம். சுதந்திர தின ரங்கோலி போட்டியில் வரையாத குறை! அவ்வளவு addictive..

சிலசமயம், இந்தப்புள்ளியா, அந்தப்புள்ளியா என்று ’மதில்மேல் பூனை’யாகி திணறவிடுகிறது!


வேலைக்கு பிரச்சனையாகாமல் இருக்கணும். அதேசமயத்துல, போரடிச்சா விளையாடணும் ஆன்லைன்ல.. அதுக்கும் வழி இருக்கு!
”என்னைப்பார்த்தா தெரியல நான் ரொம்ப பிஸினு ?? “- இப்படி ஒரு தளம்!

மாதிரியே இருக்கும்.. ஆனா எக்செல் இல்லை. வேர்ட்டும் இல்லை! மேனேஜர் பக்கத்துல இருந்தாலும் கண்டுபிடிக்கிறது கஷ்டம்!மேனேஜர்களுக்கு ஒரு அட்வைஸ்:
உங்கள் டீம்மேட்ஸ், எம்.எஸ்.வேர்ட் அல்லது எம்.எஸ்.எக்செலில், பிஸியாக இருந்தா, கிட்டபோய் பாருங்க! ஏதோ நம்மளால முடிஞ்சது, நாரா..யணா !

Wednesday, August 11, 2010

எந்திரன் ரஜினி - ”தன்னடக்கத்தோட இருப்பது தப்பாய்யா?”


ந்திரன் இசை வெளியீட்டில் ரஜினி, காதல் காட்சிகளில் ஐஸூடன் நடிக்க கூச்சமாகவும், தூரத்திலிருந்து பார்த்தால், அமிதாப் ‘ஜாக்கிரத!’ (கபர்தார்) ங்கிறா மாதிரியும் இருந்தது.. என்று சொன்னாலும் சொன்னார். அடுத்த நாள், இணையத்தில் அந்த வார்த்தையின் ஹிட்ஸை நீங்களே பாருங்கள்..!

(கிளிக் செய்து பெரிதாக பார்க்கவும்)

நேற்றைக்கு யாஹூ(Yahoo!)வின் முகப்பில், ஒரு செய்தி! சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சினால், ரசிகர்கள் கடும் அதிருப்தி! யாரும் சங்கடப்படுறமாதிரி எதையும் சொல்லமாட்டார் ரஜினி!

யாஹூ-வே அவர் அரசியலுக்கு வருகிற பேச்சு, இனிமேல் எந்த சர்ச்சையையும் கிளப்பாது என்பதனால் அப்படி என்னதான் சொல்லி திடீர் சலசலப்பிற்கு காரணமானது? என்று தலையைப்பிய்த்துக்கொள்கிறது.

எந்திரன் படத்தில், கலாநிதியின் ஒத்துழைப்பு, ஷங்கர், ரஹ்மான், வைரமுத்து, ஐஸ்வர்யா ராய், ராண்டி, பீட்டர் ஹெய்ன்,பானு(ரஜினி மேக்கப் வுமன்) ஆகியோர்களின் உழைப்பு பற்றி சிலாகித்து கூறியதும், தன்னைத்தாழ்த்திக்கொண்டதுமாதிரி பேசியதும் சர்ச்சையை கிளப்பிக்கொண்டிருக்கின்றன...

ரஜினி -

“இந்தப்படத்தில், என் ஸ்டைல், என் பேச்சு...எதுவுமே கிடையாது. எல்லாமே டைரக்டர் எனக்காக முடிவு பண்ணிட்டார்..”, 

“நீங்களே வர்றீங்க, ஒரு குழந்தைக்கு அனைத்தும்  சொல்லிக்கொடுத்து, வேடிக்கை பார்ப்பதுமாதிரி எனக்கு நடக்க, பேச,நடிக்க, டான்ஸ் ஆட சொல்லிக்கொடுத்து, மேக்கப் போட்டு, பெரிய பெரிய படங்களெல்லாம் எடுத்து, என்னை அழகுபார்த்து, எனக்கு பெயர் வாங்கிக்கொடுக்கிறீங்க!” 

“150 கோடியில எடுப்பதுனால மட்டுமோ, அல்லது உலகப்பிரபலங்கள் பணிபுரிந்த படம் என்பதனாலேயோ இந்தப்படம் சூப்பர் என்றால் ஒத்துக்கமுடியாது...இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன்!”

இப்படி பேசியதுதான் பிரச்சினையாயிருக்கிறது...
ரஜினி ஒரு எளிமையான மனிதர்.. அவர் பேச்சும் செயலும் அப்படியே! (இமயம் செல்லும்போதெல்லாம், கட்டாந்தரையில் தூங்குவது; யாரும் எதிர்பாரா வண்ணம் கமல்-50 ல், ’தன் ரோல்மாடல் கமல்தான்!’ என்பது;) என்றைக்குமே தனக்கே தனக்கு ஒரு பிரமாண்டம் இருப்பதாக நினைப்பவரில்லை. அவருடைய எளிமை குணம் தெரிந்தும், தீவிர ரசிகர்களுக்கு அவருடைய பேச்சு சந்தோஷத்தை கொடுக்கவில்லை... நிஜத்தில் எவ்வளவுதான் தன்னடக்கத்தோடு இருந்தாலும், தன்னை எங்கேயும் விட்டுக்கொடுக்காமல் இருக்கவேண்டும் என்பது ரசிகர்களின் அவா. (”ஆனா, படம் மட்டும் முதல் ஷோ வுல பாத்திருவோம் தலைவா!”)

(நன்றி: டைரக்டர் ஷங்கரின் தளம்)

ஜினி இன்னுமும் கதாநாயகனாக நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இருக்கிறார்கள்.. அவருக்கு ஐஸ் ஜோடியா என்ற அங்கலாய்ப்பு வேறு! Entrapment(1999) பார்த்திருந்தவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள். ஹீரோ ஷேன் கானரிக்கு சுமார் 70 வயது.. ஹீரோயின் காத்தரீனுக்கு 35!

ரோபோ கதை முதலில் சுஜாதாவால், கமலுக்காக எழுதப்பட்டது என்பது தெரியும். தயாரிப்பு செலவுகள் அதிகம் தேவை என்பதால் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது. கமலுக்குப்பின், ஷாருக், அஜித், அமீர்கான், கடைசியில் ரஜினி என்று முடிவு செய்து, இடையில் சுஜாதா மறைந்து, விட்டுச்சென்ற  மீதி வசனங்களை ஷங்கரே எழுதி... இதோ இப்பொழுது எந்திரன்!

ரோபோ-விற்கு, எந்திரன் அல்லது எந்திரா என்று சுஜாதா சொன்ன தமிழ்  தலைப்புகளிலிருந்து, எந்திரன்-ஐ ஓகே செய்துகொண்டார் ஷங்கர்.

எப்படி மறந்தார்கள் சுஜாதாவை...!

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ரிலேக்ஸ் - ஓட்டல் வாசலில்!

அவ்ளோதான் இன்னிக்கி!
உங்கள் கருத்துக்களை சொல்லுங்க!

Saturday, August 7, 2010

எந்திரன் இசை வெளியீடு(Callout-toons) மற்றும் ஒரே நாளில் உலகப்புகழ்பெற்ற கைப்புள்ள!

ந்திரன் - இசை வெளியீட்டு விழாவில் சொல்லப்படாத விஷயங்கள்.. (முக்கியக்குறிப்பு : யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல!)
கலாநிதி மாறன்

தயாநிதி மாறன்

ரஹ்மானும் ஷங்கரும்

ஐஸ்வர்யா ராய்

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒரே நாளில் உலகப்புகழ்பெற்ற கைப்புள்ள!

Antoine Dodson என்றொருத்தரின் விரக்தியான (வெறும்) பேச்சு வீடியோவாக யூட்யிபில் கிடைக்க, Auto tune remix என்ற மென்பொருள் மூலம் புகுந்து விளையாடிவிட்டார்கள்..
சாதாரண பேச்சை பாடலாக மாற்றித்தரும் மென்பொருள் அது. ஒரிஜினல் பேச்சு மற்றும் ரீமிக்ஸ் என்று அவருடைய எல்லா வீடியோக்களுக்கும் இதுவரை கோடிக்கணக்கான ஹிட்ஸ்! யூட்யூபின் முகப்பிலும் இவருடைய முகத்தைப்பார்த்திருக்கலாம். மனிதர் செம குஷியில் இருக்கிறாராம்(அதுவும் யூட்யூபில் உள்ளது). வீடியோ கமெண்ட்களில் நிறவெறி தாண்டவமாடுவதுதான் சகிக்கமுடியவில்லை!

ரீமிக்ஸ் (பிரமாதமான பாடலாக!!!) இங்கே


ஓரிஜினல் இங்கே

குறிப்பு: இந்த இரண்டு வீடியோக்களால், பதிவு தரவிறக்குவதில் நேரமாகிறது. அதனால் அதன் இணைப்பு மட்டும் மேலே!

Thursday, July 8, 2010

MS - Excel -ல் நிபுணத்துவம் உள்ளவரா? - Wanted Professionals (MNC)

MS - Excel - ல் நிபுணர்களுக்கு ஒரு அரிய வேலைவாய்ப்பு!

வேலைவிவரங்கள்:

Skills : Expert-Level Knowledge in MS - Excel and able to perform actions such as pivoting, applying formulas - vlookup, etc.

Company : Computer Sciences Corporation (CSC)

Experience : 1-2 Years

Required Joining Time : within one week.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் என் tamilpoo[at]gmail[dot]com க்கு மின்னஞ்சலில் உங்கள் பயோடேட்டா-வை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மீண்டும்...

Saturday, May 8, 2010

Wanted - Corporate Trainers (.NET 3.5/Sql Server Reporting Services)

பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களைக்கற்றுத்தர, ஒரு கார்ப்பரேட் பயிற்சி நிறுவனத்திற்கு, Full-time/Part-time Trainers தேவைப்படுகிறார்கள்.

கீழ்கண்ட ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தில் புலமை பெற்றிருத்தல் அவசியம்:

(1) .NET 3.5 Framework
(2) Sql Server Reporting Services (SSRS)
(3) Sql Server - Performance Tuning Techniques

என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள:


தங்களுக்கு தெரிந்த பகுதிநேர வேலைவாய்ப்புக்கள் ஏதேனும் இருப்பின் எனக்கு தெரியப்படுத்தவும்!

மீண்டும்...

Monday, May 3, 2010

ஜூன் 1-லிருந்து, ஆங்கிலம் A-Y தான்.. ‘Z' இல்லை !!!

"Are you crazy?" என்றால் இனி தவறு! "Are you crasy?" அல்லது “Are you craxy?" என்பதுதான் சரி.

English Language Central Commission (ELCC)’ என்றொரு அமைப்பு! தீவிர ஆலோசனை மற்றும் விவாதத்தின் முடிவில், ஆங்கிலத்தில் A-Z லிருந்து, Z மட்டும் நீக்கிவிடுவது பற்றி முடிவெடுத்துள்ளது. இந்த எழுத்திற்கென்று தனியாக எந்தவோரு ஒலியமைப்பும் இல்லாததே இதற்குக்காரணம்!

இங்கே பாருங்கள்

இதையும் பாருங்கள்

Zebra, zero, zodiac, zorro போன்ற இடங்களில் ”S” ஒலியோ அல்லது "X" ஒலியோ பெற்றிருப்பதால், தனியாக எதற்கு ஒரு எழுத்து என்ற ரீதியில் யோசிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது! அதனால், இனிமேல் zero இல்லை. xero தான். zoo இல்லை xoo! zone, இனி xone. zodiac, இனி xodiac ஆகும்!

Z

மானாட மயிலாட-வில், இனி “amazing performance” கிடையாது. Amasing அல்லது Amaxing(!!!???) தான். அதேபோல, நகைச்சுவை வசனகர்த்தா Crasy Mohan அல்லது Craxy Mohan என்பதே சரி.

Zzzzzzz

யாராவது தூங்குவதாக கார்ட்டூன் வரைந்தால், Xxxxxxxxx தான், Zzzzzzzz கிடையாது!

அய்யய்யோ நினைச்சு பார்க்கவே பயமாயிருக்கே! கண்ணக்கட்டுதே! என்ன பண்ணுவேன்!


இருங்க இருங்க... இப்போ என்ன நடந்துபோச்சுனு இப்படி புலம்புறீங்க!

மீண்டும் இங்கே பாருங்க

ஆமாங்க.. நம்ம Z நம்மள விட்டுட்டு எங்கும் போகல! சும்மா பயபுள்ளய ’ஏப்ரல் பூல்’ கொண்டாடியிருக்குதுங்க! இந்தப்புரளி, சாதாரண வாசகனிலிருந்து, கூகிள் வீக்கிப்பீடியா,டிவிட்டர் வரை பெரிய அதிர்வை ஏற்படுத்தியதாம்!

மாநகர பேருந்து-தோறும், ’தமிழ் செம்மொழி மாநாடு, சூன் 23’ என்ற வாக்கியம் அதே அதிர்வை என்னுள் ஏற்படுத்தியது! ஜூன் 23 என்றோ அல்லது அந்த தமிழ் மாதத்தின் பெயரேயோ குறிப்பிட்டிருக்கலாமோ என்று தோன்றியது.

தயவுசெய்து படித்த பிறகு மறவாமல் வாக்களிக்கவும் :)

Sunday, May 2, 2010

கமலின் தசாவதாரமும், செக்வே (Segway) யும்!

தசாவதாரம் திரைப்படத்தில், கமல் உபயோகிக்கும் இந்த வாகனத்தை பார்த்திருப்பீர்கள். இதற்கு பெயர் - செக்வே அல்லது சிக்வே. (Segway Personal Transporter)


இதன் சிறப்புக்கள்
  • இரண்டு லித்தியம் பாட்டரிகளால் இயங்கக்கூடியது.ஒரு தடவை சார்ஜ் ஏற்றினால்,24 மைல்களை, 12.5 மீ/ம வேகத்தில் கடக்கலாமாம்.
  • வாகனப்புகை கிடையாது(Zero emissions). எப்படியிருக்கும்? அதான் பாட்டரியாச்சே!

  • ஒரு சராசரி காரை விட, 11 மடங்கு சிறந்ததாக இருக்கிறதாம்.

  • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரி ரோடுகளில் மட்டுமல்ல, மிக கரடுமுரடான காடுகளில்கூட சிக்வே-யை பயன்படுத்தமுடியும். வழுவழு பிரதேசங்களில் மட்டும் பயன்படுத்தமுடியாது.

  • ஸ்கேட்டிங் போல சமநிலை பயிற்சி(balancing) தேவையா? இல்லவே இல்லை. செக்வே-யில் நமது சமநிலையையும் இயக்கத்தையும் உணர, ஆறு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. துரிதமாக மிகக்குறைந்த விநாடிகளில், சமநிலைமாற்றங்களை உணர்ந்துகொண்டு அதற்கேற்றவாறு,தானே சக்கரத்தை திருப்பி நின்றுகொள்கிறது.

”எப்படி காருக்கு ஒரு குட்டி குதிரை என்று உவமை தருகிறோமோ அதேபோல, இது ஒரு குட்டி கார் என்றால் தகும்!” என்கிறார் கண்டுபிடித்த Dean Kamen. மனிதர் அதற்குள் பாடண்ட் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறார். சுயமாக சமநிலைக்கு வரும் இயக்கதின் ரகசியத்தை எங்கிருந்து பெற்றாராம்? மனித உடலில் இருந்துதான்! நமது காதுகளுக்குள் இருக்கும் சமநிலை அமைப்பு, நாம் விழுப்போவதுபோன்ற தருணங்களில், ”விழப்போறான் காப்பாத்து!” என்று மூளைக்கு அறிவிக்க உடனே பாலன்ஸ் செய்து நின்றுவிடுவோம்.

விலை 2 லட்சம் என்று அதிகாரப்பூர்வமற்ற தளங்கள் தெரிவித்தாலும், செக்வே நிறுவன தளத்தில் ஒன்றும் சொல்லவில்லை.

சிக்வே-யில் பயணம் செய்யும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் சிக்வே-யில் இருந்து கீழே விழும் காட்சி இங்கே:


சிக்வே - சிறுசிறு விபத்துகள் யூட்யூபிலும்

http://www.youtube.com/watch?v=pmLLGYn9Fo8
http://www.youtube.com/watch?v=wjldrPLX7Pg
http://www.youtube.com/watch?v=LZSvHKU7ytc

மேலும் விவரங்கள் மற்றும் ஆதாரம்
http://www.segway.com
http://www.howstuffworks.com/ginger.htm


புலால் உண்பது பாவம் என்றால், செல்போன்கள் பயன்படுத்துவது அதைவிட பாவம். அதுவும், நீங்கள் அடிக்கடி போனை மாற்றுபவராக இருந்தால் பெரிய பாவக்காரர். ஏன்? ஒவ்வொரு செல்பேசி தயாரிப்பிற்காகவும் சுமார் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றதாம். அதை தவிர்க்கவேண்டி, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை மட்டும் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த புது சோனி எரிக்ஸன் போன் - Sony Ericsson Aspen™ GreenHeart™. இதைச்செய்வதினால், 13,000 மரங்கள் (உலகின் 15%) வெட்டாமல் காக்கப்படுமாம்!


தயவுசெய்து படித்த பிறகு மறவாமல் வாக்களிக்கவும் :)

Monday, April 26, 2010

பகுதிநேர வேலைவாய்ப்புக்கள் - Corporate Trainer!

நீங்கள் சாப்ட்வேர் இன்ஜினியரா? ப்ரொபஸரா? அத்தோடு பகுதிநேர வேலைவாய்ப்புக்களில் விருப்பம் உள்ளவரா? அப்படியென்றால், கீழே படியுங்கள்:

சென்னையில் உள்ள ஒரு கார்ப்ரேட் பயிற்சி நிறுவனம் ஒன்றிற்கு கீழ்கண்ட தொழில்நுட்பங்களில் மற்றவர்களுக்கு பயிற்சி தருவதற்கு பகுதிநேர பயிற்சியாளர்கள் (Corporate Trainers - Part Time) தேவை.


தொழில்நுட்பங்கள்:

* .NET 2.0/3.5 + Sql Server
* Java/J2EE + RDBMS Concepts
* Mainframe Applications
* Oracle
* BI Tools - Cognos, Informatica

பயிற்சி நேரங்கள்:
* Weekends/Weekdays - Convenient Timings

சம்பளம்:
* Decision as per their company


விருப்பமுள்ளவர்கள் என்னுடைய tamilpoo @ gmail.com மின்னஞ்சலில் பெயர்,கற்றுத்தர விரும்பும் தொழில்நுட்பம், பயிற்சிநேரம் ஆகியவற்றோடு தொடர்பு கொள்ளவும். நாளை(28/04/2010)க்குள் நேர்முகத்தேர்வுக்கு வரமுடியுமா இல்லையென்றால் வரும் சனிக்கிழமையில் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளமுடியுமா? என்பதையும் குறிப்பிடவும். மின்னஞ்சலில் நிறுவனத்தின் தகவல்களைப்பற்றி தெரிவிக்கிறேன்.

மீண்டும் பார்ப்போம்...:)

Sunday, February 21, 2010

ரியல் எஸ்டேட் கண்காட்சியும், சாலமன் பாப்பையாவும்!

CREDAI அமைப்பை சேர்ந்த தமிழக ரியல் எஸ்டேட் அதிபர்கள், இந்த வாரம் தங்களுடைய ப்ராஜக்ட்கள்(கட்டிடங்கள்) பற்றிய கண்காட்சியினை சென்னை நந்தம்பாக்கம் Chennai Trade Center-ல் நடத்தினார்கள். கடைசி நாளான இன்று போன போது செமத்தியான கூட்டம்.

நன்றி அக்‌ஷயா ஹோம்ஸ்
(நன்றி அக்‌ஷயா ஹோம்ஸ்)

காரணம் - Affordable வீடுகளல்ல, சாலமன் பாப்பையா! ‘தனி வீடா அல்லது தொகுப்பு வீடா (வாங்குவதற்கு எது சிறந்தது?)’ என தங்கள் வழக்கமான பட்டிமன்றக்குழுவினரோடு (ராஜா,பாரதி பாஸ்கர், மேலும் நால்வர்) வந்திருந்தார். தெரிந்த தீர்ப்பைத்தான் சொல்லப்போகிறார் என்றாலும், பாப்பையாவுக்காக நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள்.

ஸ்டார் பேச்சாளர்களான ராஜாவும், பாரதி பாஸ்கர் பேசியது கடைசியில்!

ராஜா வாதாடியது தனி வீட்டுக்காக - “தனிவீடுனா, ஒரு Privacy இருக்கும், முழு உரிமை (தரையும் என்னது, கூரையும் என்னது) இருக்கும்.தொகுப்பு வீடுகளில், பக்கத்து வீட்டுக்காரர்கள் பெரும்பாலும் வம்புக்காரர்களாக இருப்பது, ஒரு வீட்டில் இருக்கும் குழந்தைகளின் விளையாட்டுச்சத்தம் அருகாமையில் இருக்கும் வயதானவர்களுக்கு தொல்லையாய் இருப்பது” இப்படி சில விஷயங்களைக்குறிப்பிட்டார். ”நான் மூன்றாவது மாடியில் தொகுப்பு வீட்டில் இருக்கிறேன். வசதியிருந்தால் தனி வீடு வாங்கி செட்டிலாகுங்கள்” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்து பாரதி பாஸ்கர், தொகுப்பு வீட்டைப்பற்றி ”Affordability,Security" என்று குறிப்பிட்டார். வருவாய்க்கு ஏற்ற வாங்கும் திறன் உள்ள மேல்நடுத்தர வர்க்கத்தினர் ஒருவருக்கு தொகுப்பு வீடுதான் ஏற்றது. அக்கம்பக்கத்தினர் இருப்பதால் பயமில்லாமலும் இருக்கலாம். தன் வயதான பெற்றோர்களை கவனிக்க இயலாமல் இருப்பதற்கு காரணம், பெற்றோர்கள் தனிவீட்டில் இருப்பதுதான் என்றும் சொன்னார். ஊருக்கு வெளியில் எங்கோ தனி வீடென்று எடுத்தால், அண்டைவீட்டுக்காரர் எனப்படுபவர் பல கிமி தொலைவில் இருப்பார். அதனால், பலமுறை யோசித்து தொகுப்பு வீடு வாங்கிக்கொள்ளுங்கள். இப்படி சில கருத்துக்களைச்சொன்னார்.

சரி அடுத்து தீர்ப்புதான் என்று எல்லோரும் நிமிர்ந்து உட்காரும் சமயம். செக்ரட்டரி மைக்கில் குறுக்கிட்டார். “குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு தீர்ப்பைத்தருமாறு, நடுவரிடம் வேண்டுகிறோம்” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.

பெரிய கேக்கோடு வந்து மேடையேறினார்கள் மாடல் பெண்கள். பாரதி பாஸ்கர்தான் உண்மையைச்சொன்னார். “நடுவர் பாப்பையா அவர்களுக்கு நாளை பிறந்தநாள். இது அவருக்கு மேடையுலகில் பொன்விழா ஆண்டு. மேடைகளில் பேச ஆரம்பித்து ஐம்பது வருடங்கள் ஆகின்றன” என்றார். பிறகு, சம்பிரதாயத்திற்கு கேக் ஊட்டல், பொன்னாடை போர்த்துதல், நினைவுப்பரிசு வழங்குதல்,பார்வையாளர்களும் தனித்தனியாய் போய் வாழ்த்து சொல்லுதல் என்று கொஞ்ச நேரம் பட்டிமன்றத்தையே மறந்துவிட்டார்கள்!

அதற்கப்புறம் பட்டிமன்றத்தை மீட்டெடுத்தது, பாப்பையாதான். ”வருவாய்க்கு மீறி பணம் செலவிட்டு ஊருக்கு வெளியில் தனி வீடு வாங்குவதை விட நகர்ப்புறத்திலேயே தொகுப்பு வீடுகளில் இருப்பது பாதுகாப்பானது மற்றும் சிறந்தது” என்று அறிவித்தார்.

சரி, கண்காட்சியில் வீடெல்லாம் எப்படி என்கிறீர்களா? அடப்போங்கங்க..
சிட்டியிலிருந்து 2 மணி நேரத்திலில் இருக்கிறது இந்த இடம், வெறும் 15-தான் என்கிறார்கள். இப்படி சொன்னதும், எனக்கு சொல்லத்தோன்றியதெல்லாம் இதுதான் - ”சிட்டியிலிருந்து 8 மணி நேரத்தில் எங்க மருத ஊரே வந்துடுமேப்பா??!!”.

அடையார் காந்திநகர் வீடென்றால், எக்கச்சக்க டப்பும் உடையார்! மைலாப்பூரில் ஒரு சதுர அடி 13500/- விலை போகிறது. சிறுசேரி, டைடலைக்காரணம் காட்டி, திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை(Most Polluted Place), மடிப்பாக்கம் (ஜாக்கிரதை - மழைதண்ணீர்), மேடவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில், விலை தாறுமாறாகிறது.

இந்தப்பக்கம், ராமாபுரம்,வளசரவாக்கம்(சென்னையின் 7வது அதிகவிலைபோகும் இடம் என்று எங்கோ படித்தது), போருர்,அய்யப்பந்தாங்கல், மௌளிவாக்கம்,பூந்தமல்லி,அதையும்தாண்டி... என சென்னை மாநகரம் இன்னும் இன்னும் விரிவு பெறுகிறது. ரியல் எஸ்டேட் காளைக்கு கடிவாளம்(from Govt) தேவை!

சிட்டியிலிருந்து (பூந்தமல்லியிலிருந்து) வெறும் 30 கிமி தொலைவில் ராஜீவ் நினைவிடத்திற்கு அருகாமையில் 750 சதுர அடி, இரண்டு படுக்கையரை கொண்ட வீடு வெறும் 14.7L க்கு, ஒரு இடத்தில் தருகிறார்கள்.. அதுதான் பரபரப்பான பேச்சே!

எதிர்காலத்தில் அந்தப்பகுதியில், விமான நிலையம் வரப்போகிறது என்றும், இல்லை அந்த பிளான் dropped என்று இரு வேறு தகவல்கள் கசிகின்றன...

Price - is What you pay,
Value - is What you get
வாரன் பப்பெட்

கண்காட்சியில் படித்தது!

இதென்ன இது புது வில்லங்கம் (இதப்படிங்க)
--o0o--

Saturday, February 6, 2010

நகரும் அதிசய கற்கள் - அதிசய இயற்கை நிகழ்வுகள்-1

வீடு கட்டப்பயன்படும் ஒரு அஸ்திவாரக்கல்(குண்டுக்கல்) அளவுள்ள ஒரு பாறை தானாக சமதள மணலில் நகர்கிறது, பெரிய தடத்தோடு! மனிதர்களோ மிருகங்களோ அதை நகர்த்தியதற்கான தடங்கள் எதுவுமே இல்லை..

Racetrack Playa - பாலைவனம்போல வறண்ட ஏரி. வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மலைப்பிரதேசங்களில் இருக்கின்றது(Panamint Mountains in Death Valley National Park, Inyo County, California). இங்கேதான், சின்னக்கற்கள் மற்றுமின்றி கால்பந்து அளவிலான கற்கள் கூட தானாக நகர்வதை, இயற்பியல் விஞ்ஞானிகள் வியப்புடன் பார்க்கிறார்கள்..

சிறு சிறு குழுக்களாக இரவு பகலாக ஆராய்ந்ததின் பலனாக மர்மத்தை விடுவிக்கமுடிந்தது.. கற்கள், பனிக்கட்டிகளின் உதவியினால் காற்றில் மட்டுமே நகர்கிறது என்று !!!

காற்றிலா ????!!!
(ரொம்ப அரிதான) பல கிலோமீட்டர்/நொடி வேகத்தில் காற்று பலமாக ஒரு சிறு கல்லில் ’மோதினால்’ மட்டுமே, அது தன்னிச்சையாக சில அங்குலம் நகர வாய்ப்புக்கள் உள்ளன. அதுவே, (மிதக்கும்)பனிக்கட்டியில் கட்டுண்டு நீரில் இருந்தால், சுலபமாக நீரில் பனிக்கட்டியுடன் சேர்ந்து நகரும்.எவ்வளவு பெரிய கல்லாகயிருந்தாலும்! எப்போவாவது பெய்யும் மழையால் தோன்றும் கொஞ்ச நீர், குளிர் காலத்தில் அரையும்குறையுமாக உறைந்திருக்கும்.

கீழே பாருங்கள்:
http://geology.com/articles/racetrack-playa-sliding-rocks.shtml

Racetrack_Playa - Sliding Stones 1

Racetrack_Playa - Sliding Stones 2

Racetrack_Playa - Sliding Stones 3

Racetrack_Playa - Sliding Stones 4

இப்படித்தான்:

Sliding Rocks - Phenomenon


காற்று, நீர், பனிக்கட்டி, நகருதல் - இதுதான் ரகசியம்!

ஆதாரம்:
http://geology.com/articles/racetrack-playa-sliding-rocks.shtml
http://www.physicsforums.com/archive/index.php/t-60676.html
http://www.physicsforums.com/showthread.php?t=60676

சில படங்கள்:
http://upload.wikimedia.org/wikipedia/commons/c/c7/Racetrack_Playa_(Pirate_Scott).jpg
http://runner.coleskingdom.com/pics

சில வீடியோக்கள்:
http://www.youtube.com/watch?v=yOEiuB7P7yk
http://www.youtube.com/watch?v=tHJKKdEo8TQ
http://www.youtube.com/watch?v=Kgy9HMMcstI


”வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு விரைவாக முடிவெடுக்கும் ஒரு கலை” - எங்கேயோ படித்தது.


கருத்துக்களை கீழே சொல்லுங்க !!!

Tuesday, February 2, 2010

தகுதி !!! (ஒரு பக்கச்சிறுகதை)

”இண்டர்வியூவாய்யா இது! சுத்த கண்துடைப்பு. எம்மெஸ்ஸியில கோல்ட்மெடல் வாங்கிருக்கேன்.. எனக்கு கிடைக்கலனுகூட வருத்தப்படல.. ஊர்ல கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து,போலீஸ் கேசு-னு இருந்தவனையெல்லாம் வேலைக்கு சேர்த்திருக்காய்ங்க.. அதுவும் ஒரு மேளாளர் பதவிக்கு! உலகம் எப்படியெல்லாம் போகுது பாரு!” - உள்ளே நுழைந்துகொண்டிருந்த சண்முகராஜன் காதில் அவர்கள் பேசிக்கொண்டிருந்தது விழுந்தது.

நேரே பத்மநாபனிடம் வந்தார். இருவரும் அந்த பி.எஸ்.கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள். “என்ன பத்மநாபன், அந்தப்பசங்களையும் புடிச்சிப்போட்டுடவேண்டியதுதானே! சும்மா புலம்பிக்கிட்டேருக்கானுங்க!”

”சண்முகம், இந்த கம்பெனியை எதற்காக ஆரம்பிச்சோம்னு சொல்லுங்க பார்ப்போம்!”

“வீடே இல்லாமல் இருக்கிற நகர மக்களுக்கு குறைந்த விலையில் மனை வாங்கித்தர்றதுக்காக...” சொல்லிக்கொண்டிருக்கும்போதே மறுத்து, “அது மத்தவங்களுக்கு! நான் கேட்டது, உண்மையான காரணம்!”

மெல்லிய குரலில் சண்முகராஜன், “என்ன.. எல்லார்ட்டையும் வாங்கின பணத்தை ஆட்டைய போடுறது.. எங்கையாவது தலைமறைவா ஆகிடறது.. இதுதானே! அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்!” என்று கேட்டார்.

“கரெக்ட். நாம ஓடப்போறது உறுதி. அதுக்கு ஏன் இந்த அப்பாவிப்பசங்கள் பலிகடா ஆக்கணும். நாம ஆட்டையப்போட்டு கம்பி நீட்டிட்டா, மக்களிடமும் போலிசிடமும் மாட்டிக்கொண்டு அடிவாங்கிறது, காந்தியோ, நேருவோ இல்ல! அப்புறம் இன்னுமொரு திருத்தம். நாம ஆட்டைய போடப்போறது உழைத்துக்கிடைத்த வெள்ளைப்பணத்தையல்ல!”

Monday, February 1, 2010

நேர்முகத்தேர்வுகளில் சமீபகாலமாக.. !!!

நேர்முகத்தேர்வுகளில் சமீபகாலமாக.. !!!

நீண்ட நாள் பிரம்மச்சாரிக்கு பெண் கிடைத்தால், அதுவும் லட்சணமான பெண் கிடைத்தால் என்ன ஆகும்? கூட்டம் பிய்த்துக்கொண்டு போகும் இல்லையா? அதுமாதிரிதான் இருந்தது சமீபகாலமாய் நேர்முகத்தேர்வுகளுக்கு வருகிற கூட்டத்தைப்பார்த்தால்!

Interview


ஒரு விஷயத்தில் மகிழ்ச்சி என்றாலும் (பின்னே? போட்டியில்லாமல் வெற்றி பெற்றால் சுவாரஸியமில்லையே!) இன்னொரு பக்கம், பெரிய கேள்விக்குறி! 2-3 வருடங்கள் மிகுந்த அனுபவம் உள்ளவர்களின் எண்ணிக்கையே இவ்வளவு அதிகம் என்றால், தற்பொழுதுதான் முடித்துவிட்டு வருகிறவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் இருக்கும் இல்லையா (பொறியியல் + பிற கணினி பட்டதாரிகள்)? அவர்களுக்கெல்லாம் வேலை எங்கிருந்து?

நான் சென்றது ஒரு பன்னாட்டு நிறுவனம். எதிர்பாராமல் வந்த பெரிய கூட்டத்தை எதிர்கொள்ளமுடியாமல் திண்டாடினர். காலையில் 9 மணிக்கு சென்ற என்னை முதல் சுற்றுக்கு அழைக்கப்பட்டது மாலை 6 மணிக்கு!!!
* * * * * * * * * * * * * *
யாரடி நீ மோகினி படத்தில் ஒரு சிறு தவறு!

Photobucket


கருணாஸ்-ஐ விட்டு நயன்தாராவிடம் தன் காதலை சொல்லச்சொல்வார் தனுஷ். கருணாஸ் பயந்துபயந்து கால் பண்ணுவார். நயன்தாரா எடுத்து பேசுவார். இரு பக்கமும் காட்டப்படுகிற இந்தக்காட்சியில், கருணாஸ் மற்றும் தனுஷ் இருக்கும் பகுதி நன்றாக இரவுபோல இருட்டியிருக்கும். ஆனால், நயன்தாரா பகலில்தான் பதிலளிப்பார். சரி இதையாவது பாவம் விட்டுவிடுவோம், ஒரு பெரிய படத்தில் ஒரு தவறு தெரியுமா?
* * * * * * * * * * * * * *
2012 படமும் சுனாமித்தவறும்

tsunami


நிஜமாகவே மிரட்டியிருந்தார்கள் உண்மையைப்போலவே! இமயமலை-சுனாமி காட்சி திகிலை உண்டாக்கியது.. எங்கே போனாலும் துரத்தும் நாய்குட்டிபோல ஒரு பூகம்பக்குட்டி(!) விடாமல் துரத்துகிறது. ஹைதியை உலக அழிவின் ஆரம்பமாக கூட பயந்துகொண்டு பார்ப்பார்கள். ஹைதி சம்பவம் ஒரு போராயுதமாக இருக்குமோ என்று சந்தேகிக்கிறார்களாம் என்று ஒரு பதிவர் எழுதியிருந்தார்.

இவ்வளவு துல்லியமாக பண்ணியிருக்கிறவர்களின் கண்களுக்கு இந்த சிறிய தவறு தெரியாமல் போனது ஆச்சரியம்.. கடலில் அலைகள் தோன்றும் இடங்களில்தான் சுனாமியின் பாதிப்பு அதிகமாக இருக்கும். நடுக்கடலில் அலைகள் இல்லை! அதனால் சுனாமியின்போது (நடுக்)கடல்மட்டம் சற்றே உயர்ந்து இறங்கும் அவ்வளவுதான். அந்தசமயங்களில், கப்பல் இருந்தாலும் கவிழாமல் உயர்ந்து பின் இறங்கும். புரட்டிபோடாது!
* * * * * * * * * * * * * *
அய்யகோ இந்த சென்னை ஆட்டோக்காரர்கள்
சென்னை வந்தகாலத்திலிருந்து, பெரும்பான்மையான ஆட்டோக்காரர்களின் மீதுள்ள பொதுவான மதிப்பீடுகளான அடாவடிக்காரர்கள், ஏமாற்றுக்காரர்கள், அதிகம் வசூலிக்கிறவர்கள் ஆகியவை மாறாமல் அப்படியே இருக்கிறது. போனவாரம், திநகரிலிருந்து, பெரியார்பாதைக்கு பதில், பெரியார் ரோடு என்று ஒரு இடத்தில் இறக்கிவிட்டு, அடாவடியாகப்பேசி காசும் வாங்கிச்சென்றார் ஒரு ஆட்டோக்காரர். அப்புறம் எங்கிருந்து நல்லமதிப்பு வரும்?

அதையும்மீறி சிலர் இருக்கிறார்கள், ராமாபுரத்திலிருந்து வரும் திருக்குறள் ஆட்டோ. சைதையில் இவரை அடிக்கடி பார்க்கலாம். ஆட்டோ முழுவதும் தினம் தினம் ஒரு குறள், அதன் பொருள், நாலடியார், எல்லாம் எழுதிவைத்திருப்பார்.

Samson


மற்றொருத்தர், தனக்கு ஒரு வலைப்பக்கம் வைத்துள்ளார். அவருடைய தளம் இங்கே. நல்ல உழைப்பாளியான இவருக்கு நிறைய (வெளிநாட்டு) வாடிக்கையாளர்கள் உண்டு. இவருடைய சேவையை புரிந்துகொண்டு நண்பர்களானவர்கள்தான் இவருக்கு வலைதளம் வடிவமைத்து, ஒரு மடிக்கணினியும் கூட வாங்கிக்கொடுத்துள்ளார்கள். சென்னைக்கு வருவதற்கு முன் மின்னஞ்சலில் தெரிவித்துவிட்டால், இவர் அவர்களின் வருகைகளுக்காக தயாராக இருப்பார். படித்தது பள்ளிக்கல்வி வரைதான் என்றாலும், வாடிக்கையாளர்களுக்காக ஆங்கிலம் பேசக்கற்றுகொண்டிருக்கிறார். தொலைதூர பயணத்திற்கு மீட்டர் போடுவது என்பது இவருடைய ஸ்பெஷாலிட்டி. மீட்டர் பற்றி யாராவது மற்ற ஆட்டோக்காரர்களை கேட்டுப்பாருங்கள்.. உங்களை அவதார்(வேற்றுக்கிரகவாசி) ரேஞ்சுக்கு மேல்கீழ் பார்ப்பார்கள்.
* * * * * * * * * * * * * *

LinkWithin

Related Posts with Thumbnails